சமாதிக்கு எதுக்கு டா ஏர்கூலர் ? சிடிஆர் நிர்மல்குமார் கேள்விக்கு வலுக்கும் எதிர்ப்பும் ஆதரவும்

 
ac

முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி பதவியேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவேற்று மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது திமுக.  இந்த நிலையில் திமுவுக்கு வலைத்தளங்களில் பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்த வருகின்றனர்.  திராவிட மாடல் ஆட்சி என்ற வாசகம் ட்விட்டரில் இரண்டாகி இருந்தது. 

 திமுக ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் திமுக எம்பிக்கள்,எம்எல்ஏக்கள் . தொடர்ந்து மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வரும் ஆன கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

d

திமுக தலைவர்கள் ,திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் பலரும் கருணாநிதி சென்று மரியாதை செலுத்தி வருவதால் கருணாநிதியின் நினைவிடம், ‘ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி’ என்ற வாசகங்களுடன், வண்ண மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது .  அங்கே டவர் ஏசியும் வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகி,  ’’சமாதிக்கு எதுக்கு டா ஏர்கூலர் ?’’ என்று கேட்டிருந்தார்.  இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் வலுத்து வருகிறது.

இந்த பதிவு கண்டு கொதித்தெழுந்த திமுகவினர்,  ‘’அங்கு வரும் மக்களுக்காக  காற்று வீசுகின்ற  நிலையில  உள்ளது’’என்றும், ’’அது சமாதிக்கு இல்லை .அங்கு அலங்கரிக்க பட்டுள்ள பூக்களுக்கு..’’என்றும்,   ‘’பூ வாடாமல் இருக்க அங்குள்ள மலர்கள் வாடாமல் இருக்க....’’என்று பலரும் சொல்லி வருகின்றனர்.

’’ஒரு சின்ன திருத்தம் அது ஏர் கூலர் இல்ல டவர் AC’’ என்று பதிவிட்டு வருகின்றனர்.

அதே நேரம்,   ‘’கல்லாக உள்ள உங்கள் கடவுளுக்கு ஏன்  மலர் மாலை? என்று சொன்னவரின் சிலைக்கு எதற்கு பூமாலை?’’என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.