ஆட்சியை பிடிக்கப்போவது யார்? கருத்துக்கணிப்பு முடிவுகள்

 
c

 கர்நாடக மாநிலத்தில் ஆட்சியை பிடிக்கப் போவது யார் என்ற கருத்துக்கணிப்பு முடிவுகள் அம் மாநில அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கின்றன.  பாஜக ஆட்சியை  தக்க வைக்கும் என்று ஒரு கருத்து கணிப்பு முடிவு இருக்கும் போது,  காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று கருத்துக்கணிப்பு இருக்கிறது . மாறி மாறி வரும் இந்த கருத்து கணிப்புகள் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.   இதனால் அம் மாநில சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது .

cb

கர்நாடக மாநிலத்தில் வரும் பத்தாம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது.  224 தொகுதிகளை கொண்ட சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.   மே 13ஆம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது .  ஆளும் பாஜக ,காங்கிரஸ், மதச்சார்பற்ற ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் இடையே கடும் போட்டிகள் நிலவுகிறது. 

 பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா  பாஜகவுக்காக தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.  அதேபோல் காங்கிரஸ் தரப்பில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டவர்கள் தீவிரப் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் நாளை சோனியா காந்தியும் பிரச்சாரம் செய்ய இருக்கிறார்.

 இந்நிலையில் அடுத்து ஆட்சியைப் பிடிக்க போவது யார்? என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன.  இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் மாறி மாறி வருகின்றன . 

 சீ ஓட்டர் நிறுவனத்துடன் இணைந்து பிரபல கன்னட தொலைக்காட்சி வெளியிட்ட கருத்துக்கணிப்பில் பாஜக 79 முதல் 89 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், காங்கிரஸ் 106 தொகுதிகளில் இருந்து 116 தொகுதிகளில் வெற்றிபெறும் என்று கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டிருந்தது.  மதச்சார்பற்ற ஜனதா தளம் 24 தொகுதிகளில் இருந்து 34 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் , பிறர் கட்சிகள் ஐந்து தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் அந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் இருந்தன . 

b

இந்த கருத்து கணிப்பு முடிவுகளால் காங்கிரஸ் வட்டாரம் கொண்டாட்டத்தில் இருந்தது.  இழந்த ஆட்சியை மீண்டும் பெற்று விடுவோம் என்ற நம்பிக்கையில் இருந்தனர். ஆனால் இந்த நம்பிக்கையை கொண்டாட்டத்தை சிதைத்திருக்கிறது டிவி9 கருத்துக்கணிப்பு.   டிவி 9 வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகள் வேறு விதமாக இருக்கிறது .   அதில் பாஜக 105 தொகுதிகளில் முதல் 110 தொகுதிகளிலும்,  காங்கிரஸ் 90 தொகுதிகளில் இருந்து 97 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் 19 தொகுதிகளில் இருந்து 22 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கூறப்பட்டிருக்கிறது.  இந்த கருத்துக்கணிப்பு முடிவுகளால் பாஜக வட்டாரம் மிகுந்த கொண்டாட்டத்தில் இருக்கிறது. 

 கருத்துக்கணிப்பு முடிவுகள் மாறி மாறி வருவதால் அடுத்து ஆட்சி அமைக்க போவது யார் என்ற குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது.  இது கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.