யார் பெரிய நம்பிக்கை துரோகி: இபிஎஸ் -செந்தில்பாலாஜி மோதல்

 
எ

அதிமுக, அமமுக, திமுக என்று அடிக்கடி கட்சி மாறிக்கொண்டே இருப்பவர் செந்தில்பாலாஜி.   சசிகலாவால் முதல்வர் ஆகி, ஓ.பன்னீர்செல்வதால் அதிமுகவை தன் வசம் கொண்டு சென்று அவர்களுக்கே இன்று துரோகம் செய்துவிட்டார் எடப்பாடி பழனிச்சாமி என்று எதிர்க்கட்சியினரும் விமர்சித்து வருகின்றனர்.

எ

இந்த நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜி,  ‘’கூவத்தூரில் அவர் எப்படி முட்டிபோட்டு முதலமைச்சர் ஆனார், நம்பிக்கை துரோகத்தால் எப்படி அவர் அந்த பொறுப்பை தக்க வைத்துக்கொண்டார் என்பதெல்லாம் நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும்’’ என்று செய்தியாளர்களிம்  பேசினார்.  

இதற்கு எடப்பாடி பழனிச்சாமி பதிலடி கொடுத்திறார்.  அவர் இதுகுறித்து,  ‘’துரோகத்தின் மொத்த வடிவமே செந்தில்பாலாஜிதான்.  திமுகவில் எவ்வளவு சீனியர்கள் இருக்கிறார்கள்.  இவர் போயி 5 வருசம் கூட ஆகல.  ஆனா அவர் பேட்டி கொடுக்கிறார்.  திமுகவுல ஆளே இல்லையா? திமுகவில் 50,60 வருட காலம் உழைத்துக்கொண்டிருக்கின்ற சீனியர்களை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு துரோக செயல் புரிந்து குறுக்கு வழியில் அவர்தான் போயிருக்கிறார்.  நாங்கள் யாரும் குறுக்கு வழியில்ல வரவில்லை.  1974ல் அதிமுகவில் சேர்ந்தேன்.  இன்று வரை அதிமுகவிலேயே இருக்கிறேன். ஆனால், செந்தில்பாலாஜ் எத்தனை கட்சிக்கு  துரோகம் இழைத்துவிட்டு சென்றிருக்கிறார். ஒரு கட்சிக்கு ரெண்டு கட்சிக்கா போயிட்டு வந்திருக்கிறார்.  துரோகத்தின் அடையாளம் செந்தில் பாலாஜிதான்.   போயிருக்கிற கட்சிக்கெல்லாம் துரோகம் செஞ்சவர்.  அவர் துரோகத்தை பற்றி பேசக்கூடாது’என்று கூறியிருக்கிறார்.

ச்

சென்னை தெற்கு மாவட்டம் சோழிங்நல்லூர் மேற்கு பகுதி திமுக சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் திமுக அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் சென்னை மடிப்பாக்கம் பேருந்து நிலைய பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, மின்சாரத் துறை அமைச்சர் செந்தி்பாலாஜி, சமூக நீதிக் கண்காணிப்புக் குழு தலைவர் சுப. வீரபாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர். பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசியபோதுதான் மேற்கண்டவாறு குற்றம் சாட்டியிருந்தார். மேலும், முட்டிபோட்டு முதலமைச்சர் ஆனவர்களால் நிதிநிலை அறிக்கையை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அரைவேக்காடு தானமாக நிதிநிலை அறிக்கை முடியும் முன்பே வெளியில் வந்து விமர்சித்துள்ளனர் என்று கடுமையாக விளாசி இருந்தார் செந்தில்பாலாஜி.