யார் அந்த கருப்பு ஆடு? ‘போட்டு’க்கொடுத்தது ஏன்?

 
ர்

தீட்சிதர்களுக்குள் இருக்கும் ஒரு கருப்பு ஆடு போட்டுக் கொடுத்திருக்கிறது.  அதனால் தான் இத்தனை பிரச்சனை.  ஆனால் நடந்த கொடுமைகளுக்கு பின்னர் தீட்சிதர்களுக்கு ஒற்றுமை ஏற்பட்டிருக்கிறது என்கிறார் தீட்சிதர்களின் வழக்கறிஞர் சந்திரசேகர்.

 சிதம்பரம் தீட்சிதர்களின் வீட்டு இளம் பெண்கள் கொடுமைப்படுத்தப்பட்டார்கள்.  இரு விரல் கன்னித்தன்மை பரிசோதனைக்கு ஆளாக்கப்பட்டார்கள். இதனால் அவர்கள் தற்கொலைக்கு முயற்சி செய்தார்கள் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி சொன்னது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.  தமிழக டிஜிபி இதை மறுத்தாலும் தேசிய குழந்தைகள் நல ஆணையம் அரசிடம் விளக்கம் கேட்டு இருக்கிறது . உண்மையை உலகிற்கு எடுத்துச் சொன்ன ஆளுநருக்கு நன்றி தெரிவித்து சிதம்பரம் தீட்சிதர்கள் சார்பில் ஆளுநருக்கு கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது .

ர்

இது குறித்து தீட்சிதர்களின் வழக்கறிஞர் சந்திரசேகர்,   தீட்சிதர்களுக்குள் இருக்கும் ஒரு கருப்பு ஆடு தீட்சிதர் குடும்பங்களில் பாலியல் விவாகம் நடப்பதாக போட்டுக் கொடுத்திருக்கிறது.  இதனால் ஆட்சி மேல் இடத்திலிருந்து கடலூர் மாவட்ட எஸ்பிக்கு உத்தரவு பறந்து இருக்கிறது.  உடனே தீட்சிதார்கள் வீட்டு இளம் பெண்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்கள் .  நாங்கள் பாலியல் விவாதம் செய்து கொண்டோம் என்று எழுதிக் கொடுக்கச் சொல்லி அச்சுறுத்தினார்கள். ஆனால் அச்சுறுத்தலுக்கு பயந்து யாரும் எழுதிக் கொடுக்கவில்லை.  

 இதனால் குடும்பத்தினர் அனைவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து  சென்று அச்சுறுத்தினார்கள்.  பலரை கைது செய்தார்கள் . அதுமட்டுமல்லாமல் சீட்சிதர் வீட்டு இளம் பெண்களுக்கு சோதனை நடத்தினார்கள்.  மருத்துவ பரிசோதனை என்கிற பெயரில் உலக அளவில் தடை செய்யப்பட்டு இருக்கும் இருவிரல் பரிசோதனை தீட்சிதர் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு இளம் பெண்களுக்கு செய்தார்கள் . இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் போலீசார் அதை கண்டுகொள்ளவில்லை.

பால்ய விவாகம்  செய்யப்பட்டது என்றால்  அது நிரூபிக்கப்பட்டால் கூட தண்டனை என்பது இரண்டு ஆண்டுகள் தான்.  ஆனால் அந்த புகாருக்காக கைது செய்வது தவறு. அப்படி இருக்கும்போது இரு விரல் பரிசோதனை செய்து இருப்பது அதிகபட்ச கொடூரம் . இதனால் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் அந்த பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் . 

ச்

இதை அடுத்து மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தோம்.  அந்த புகாரின் நகலை ஆளுநருக்கு அனுப்பினோம் . உடனே தமிழக அரசு சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி ஆளுநரிடம் மனித உரிமை ஆணையம் கேள்வி எழுப்பி இருந்தது . இதன் பின்னர் தான் முதல்வருக்கு கடிதம் அனுப்பி ஆளுநர் விளக்கம் கேட்டிருக்கிறார் . ஆனால் முதல்வர் எந்த பதிலும் அளிக்கவில்லை.  இதை அடுத்து தான் ஆளுநரே நேரடியாக களத்தில் இறங்கி தீட்சிதர்கள் குடும்பத்தில் விசாரணை நடத்தி நடந்த உண்மையை தெரிந்து கொண்டு தனது பேட்டியின் மூலமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

 இது மனித அப்பட்டமான மனித உரிமை மீறல் என்பதை வெளி உலகத்திற்கு எடுத்துச் சொல்லி இருக்கிறார் .  இதற்காக ஆளுநருக்கு நன்றி தெரிவித்துள்ளார்கள் தீட்சிதர்கள்.

 சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசு நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை முயற்சித்தது . ஆனால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அப்படி அமையாததால் ஆத்திரமடைந்த அரசு இப்படி செய்து விட்டது . அதற்கு ஒரு கருப்பு ஆடு உதவியாக இருந்துவிட்டது.  ஆனால் தீட்சிதர்களுக்குள் இப்போது ஒற்றுமை ஏற்பட்டுவிட்டது. சிதம்பரம் கோயில் நிர்வாகத்தை இனிய காரணம் வந்து விட்டு விடக்கூடாது என்ற மனநிலைக்கு எல்லா தீட்சிதர்களும் வந்துள்ளார்கள்  என்று அவர் கூறியிருக்கிறார்.