அமைச்சர் உதயநிதி மேடைக்கு வரும்போது தப்பித்து ஓடிய பெண்கள்

 
ch

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேடைக்கு வரும் முன்பாகவே வலுக்கட்டாயமாக அழைத்து வரப்பட்ட பெண்கள்  திமுகவினரிடம் இருந்து தப்பித்து ஓட்டம் பிடித்துள்ளனர் என்று செய்தி பதிவு செய்திருக்கிறது நமது எம்ஜிஆர் நாளிதழ்.

 மதுரை மாவட்டம் பாண்டி கோயில் ரிங் ரோடு பகுதியில் உள்ள திடலில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு திறன் சார்பில் அரசு விழா நடைபெற்றது . இது குறித்து அந்த நாளிதழ் செய்தியில் மேலும்,  விழாவில் ஏராளமான பெண்கள் திமுகவினரால் வலுக்கட்டாயமாக அழைத்து வரப்பட்டிருந்தனர்.   100 நாள் திட்டத்தில் வேலை பார்க்கும் பெண்கள், மகளிர் சுய உதவி குழுவினர் என்று ஏராளமான பெண்கள் கட்டாயப்படுத்தப்பட்டு அழைத்து வரப்பட்டு உள்ளனர்.  அது மட்டுமல்லாமல் பேருந்துகளில் அதிக அளவில் ஏற்றி ஆபத்தான முறையில் பெண்களை கூட்டத்திற்கு அழைத்து வந்துள்ளனர். 

u

 உதயநிதி ஸ்டாலின் வருகைக்காக அரசு பேருந்துகளை இயக்க விடாமல் செய்ததுடன் தனியார் டெம்போ போன்ற வாகனங்களில் பெண்கள்,  பொது மக்களை அழைத்து வந்ததால் மதுரை மாநகர் முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் உண்டானது.   இதனால் பள்ளி வாகனங்கள் ஆம்புலன்ஸ் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.  

 உதயநிதியின் நிகழ்ச்சிக்காக காலை முதல் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அழைத்து வந்த பெண்களுக்கு குடிப்பதற்கு குடிநீர் , உணவுகள் சரியாக வழங்காததால் பெண்களும் வயதானவர்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகி இருந்தனர்.    ஒரு கட்டத்தில் விரக்தி அடைந்த பெண்கள் உதயநிதி ஸ்டாலின் மேடைக்கு வருவதற்கு முன்பே சாரை சாரையாக கலைந்து சென்றார்கள்.   இதனால் கூட்டத்தினரை திரட்டிய திமுகவினர்  செய்வதறியாது தவித்தனர்.

 காலி நாற்காலிகளுடன் உதயநிதி கூட்டம் மாநாடு போல் இருப்பதாக கூறியது,  அங்கிருந்த சில பெண்களை சிரிப்பில் ஆழ்த்தியது.  உதயநிதியை வரவேற்க கட்டியிருந்த கரும்பு , இளநீரும், வாழைத்தார்களையும் யாரும் எடுத்து விடக்கூடாது என்பதற்காக 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 ஒரு அமைச்சரின் நிகழ்ச்சிக்காக அரசு பேருந்துகள் முதல் ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையும் முடக்கியது பொதுமக்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது. உதயநிதியிடம் நல்ல பெயர் எடுப்பதற்காக அமைச்சர்  பி. டியாருக்கும் மூர்த்திக்கும் இடையே கடும் ஓதல் ஏற்பட்டிருக்கும் நிலையில் வலுக்கட்டாயமாக அழைத்து வரப்பட்ட பெண்கள் அனைவரும் உதயநிதி மேடை ஏறுவதற்கு முன்பு அங்கிருந்து கலந்து சென்றது திமுகவினரின்  மிதிமீறலை வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறது என்கிறது அந்த செய்தி.