என்ன பதில் சொல்லப்போகிறார்கள் ஓபிஎஸ், இபிஎஸ்?

 
oஎ

அதிமுகவில் இருந்து தன்னை நீக்கியதை எதிர்த்து முன்னாள் எம்பி கே. சி. பழனிச்சாமி தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு வழக்கில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்டோர் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 அதிமுக முன்னாள் எம்பி கே. சி. பழனிச்சாமி.  இவர் கடந்த 2018 ஆம் ஆண்டின் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.  தனது நீக்கத்தை எதிர்த்து 2021 ஆம் ஆண்டில் சென்னை உயரநீதிமன்றத்தில் கே. சி. பழனிச்சாமி வழக்கு தொடர்ந்திருந்தார்.  

க்ச்

ஆனால்,  குறித்த காலத்திற்குள் இந்த வழக்கை தாக்கல் செய்யாமல் மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக சொல்லி கே. சி. பழனிச்சாமி தாக்கல் செய்த வழக்கை தனி நீதிபதி கார்த்திகேயன் தள்ளுபடி செய்தார் . 

தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து கே .சி. பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்திருந்தார்.

 அந்த மனுவில்,  கொரோனா தொற்று காலத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கான காலவரம்பை தளர்த்தி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.  அதன்படி கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரையிலான காலகட்டத்தில் வழக்கு தாக்கல் செய்ய முடியாததால் அக்டோபர் 2021 க்கு பின்னர் 90 நாட்கள் அவகாசம் வழங்கவும் உச்ச நீதிமன்றம் அவகாசம் அளித்திருந்ததாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

 அதனால் தான் குறித்த காலத்திற்குள் வழக்கு தொடரவில்லை என சொல்லி தனது மனுவை தள்ளுபடி செய்தது தவறு என்றும் குறிப்பிட்டு இருந்தார்.  அடிப்படைத் தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு தன்னை கட்சியிலிருந்து நீக்க அதிகாரம் இல்லை என்றும் தன்னை நீக்கியது கட்சியின் ஆரம்பகால விதிகளுக்கு முரணானது என்பதாலும் தனி நீதிபதி உத்தரவினை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் கூறி இருந்தார்.

 இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ,  அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் அனைவருக்கும் இரண்டு வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு  தள்ளி வைத்துள்ளனர்.