அந்தப்பாடலில் அப்படி என்ன ஸ்பெஷல்? ‘எனக்கு மட்டும்’காதல் திருமணம் இல்லையே என்று வருத்தமா? மனம் திறந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

 
go

 முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று 70 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.  இதை முன்னிட்டு தனியார் யூடியூப்  சேனலுக்கு அவர் நேர்காணல் அளித்திருக்கிறார். மூத்த பத்திரிகையாளர் கோபிநாத் முதல்வரை நேர்காணல் செய்திருக்கிறார்.  முதல்வர ஸ்டாலின் காலை நடை பயிற்சி சென்றபோது அவருடனே நடை பயிற்சியில்  பங்கேற்று அப்போது நேர்காணல் செய்திருக்கிறார் கோபிநாத்.

g

 வணக்கம்! உங்களுடன் காலை நடை பயிற்சியில் சேர்ந்துக்கிறோம் என்று சொல்லி சிரித்து விட்டு தனது நேர்காணலை தொடங்குகிறார் கோபிநாத்.   ’’ஸ்டாலின் என்கிற தனிநபர் பற்றி அரசியலுக்கு அப்பாற்பட்டு அவரின் தனிப்பட்ட விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான் இந்த நேர்காணலின் நோக்கம்’’ என்று தொடங்குகிறார் கோபிநாத். 

‘’ ரிலாக்ஸா இருக்கும்போது மனசுக்குள் முணுமுணுக்கும் பாடல் என்ன? ’’என்று கேட்கிறார் கோபிநாத் .  அதற்கு முதல்வர் ஸ்டாலின்,   ’’மறக்க முடியுமா.. அப்படிங்கறது திரைப்படம்.  தலைவர் வசனத்தில் வந்த படம்.  அதில் ஒரு பாட்டு எழுதி இருப்பார்.  காகித ஓடம் கடல் அலை மீது போவது போல மூவரும் போவோம் ’’என்று பாடி காட்டுகிறார் ஸ்டாலின்.     ’’அது இன்றைக்கும் மறக்க முடியாது’’ என்று சொன்ன ஸ்டாலினிடம்,   ’’அந்தப் பாட்டில் அப்படி என்ன ஸ்பெஷல்?’’ என்று கேட்க,   ’’அந்த பாடல் எடுத்திருக்கும் விதம்,  அந்த பாடலில் உள்ள கருத்துக்கள்,  அந்த படத்தில் அந்த பாடல் வந்து சிச்சுவேஷன் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிச்சது’’ என்கிறார்.

 ’’தங்களின் இரு பிள்ளைகளில் உதயநிதியா? செந்தாமரையா? யார் உங்களுக்கு ரொம்ப முக்கியமானவர்களாக இருக்காங்க?’’என்று கேட்க,   ’’இந்த கண்ணு முக்கியமா இந்த கண்ணு முக்கியமா’’ என்று இரண்டு கண்களையும் தொட்டு காட்டி சிரிக்கிறார் ஸ்டாலின். 

’’அப்பாக்களுக்கு பெரும்பாலும் பொம்பளை பிள்ளையை தான் பிடிக்கும் என்று சொல்லுவாங்க?’’ என்று கேட்க ,  ‘’இல்லை நான் அந்த வேறுபாடே பார்ப்பதில்லை. இரண்டு பேருமே என் மேல ரொம்ப அன்பு வச்சிருக்காங்க.   எதுவாக இருந்தாலும் என்னை கேட்காமல் செய்ய மாட்டாங்க.   ரெண்டு பேரின் திருமணமே காதல் திருமணம் தான்.’’என்று சொல்ல,

 ’’ரெண்டு பேருக்குமே காதல் திருமணம்.  இத எப்படி ஒத்துக்கிட்டீங்க?’’ என்று கேட்க,   ’’எங்க குடும்பத்தில் பெரும்பாலும் காதல் திருமணம் தான்.  மாறன் ஃபேமிலியில், அமிர்தம் ஃபேமிலியில், செல்வம் ஃபேமிலியில் எல்லாரும் காதல் திருமணம் தான்’’ என்று சொல்ல,   ’’எனக்கு மட்டும் காதல் திருமணம் இல்லையே என்று வருத்தத்துடன் சொல்வது போல் இருக்கிறதே? ’என்று கோபிநாத் கேட்க ,  பெரிதாக சிரிக்கிறார் முதல்வர்.

gopi

பிறகு,   ’’அதெல்லாம் இல்ல.. அன்றைக்கு அந்த சூழலில் தலைவரே முன் நின்று நடத்தி வைத்தார்.   உதயாவும் செந்தாமரையும் தங்களது காதலை என்னிடம் தான் முதலில் சொன்னார்கள்.   அப்புறமாக நான் மனைவியுடன் கலந்து ஆலோசித்து திருமணம் செய்து வைத்தோம்.  குழந்தைகள் இருவரும் எங்களிடம் கேட்காமல் எதுவும் செய்வதில்லை.  நாங்களும் அவர்களிடம்  சொல்லாமல் சொல்லாமல் எதையும் செய்வதில்லை’’என்கிறார்.

’’ஒரு மாநிலத்தின் முதல்வராக இருக்கும் நீங்கள் தனிமையில் இருக்கும் போது மனதில் என்னவெல்லாம் எண்ண ஓட்டம் இருக்கும்? என்று கேட்க ,  ‘’இதெல்லாம் இருந்தும் தலைவர் பார்க்கலையே.  தலைவருடைய எண்ணங்களை எல்லாம் இன்று நிறைவேற்றிக் கொண்டிருக்கிறேன்.   ஆனால் தலைவர் இருந்து இதையெல்லாம் பார்க்கவில்லையே அப்படிங்கற எண்ணம் உண்டு .  அதனால் தான் அடிக்கடி தலைவருடைய நினைவு மண்டபத்திற்கு சென்று கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு வரேன்’’என்று உருக்கமுடன் கூறுகிறார்.

’’அப்பா என்ன பேரு சொல்லிஅழைப்பார்? செல்லப்பேரு உண்டா? ’’என்று கேட்க,  ‘’ஸ்டாலின் என்றுதான் சொல்லி கூப்பிடுவார்.  வெளிநாட்டிலிருந்து தூதுவர்கள் வரும்போது குறிப்பாக ரஷ்யாவில் இருந்து வரும் போது என்னை கூப்பிட்டு அறிமுகப்படுத்தி வைப்பார்.  ஸ்டாலின் என்று பெயர் இருப்பதால் அப்படி செய்வார்.  அவர்கள் ஆச்சரியமாக அதை பார்த்து விட்டு செல்வார்கள்’’என்ற முதல்வரிடம்,

‘’ உங்களுக்கு பெரிய தலைவரின் பெயர் வைத்து இருப்பதால் எப்படி ஃபீல் செய்தீர்கள்?’’ என்று கேட்க ,  ‘’ரொம்ப பெருமையாக இருந்துச்சு.  ஆனால் அதே நேரத்தில் ஸ்கூலில் சேர்ப்பதில் பெரும் சிக்கல் இருந்தது.  சர்ச் பார்க் கான்வென்டில் இப்போது ஒன்லி லேடிஸ் மட்டும்தான்.   அப்போது ஆண்/ பெண் இருவரும் படித்து வந்தார்கள்.   என்னையும் என் தங்கை தமிழ்ச்செல்வியையும் அந்த ஸ்கூலில் சேர்ப்பதற்காக அழைத்துச் சென்றார் முரசொலி மாறன்.   அப்போது  ரஷ்யாவில் பெரிய பிரச்சினையாக போய்க் கொண்டிருந்தது.  அட்மிஷன் போடும்போது பேர் ஸ்டாலின் என்று இருக்குது.  அதனால் பேரை மட்டும் மாற்றி விடுங்கள்.  ரஷ்யாவில் இப்போது பிரச்சனை பெரிதாக போய்க்கொண்டிருக்கிறது என்று சொன்னார்கள் . உடனே மாமா முரசொலி மாறன் வந்து தலைவரிடம் கேட்டார்.   அதற்கு தலைவர்,   ஸ்கூலை மாத்தினாலும் மாத்துவேனே தவிர பெயரை மாற்ற மாட்டேன் என்று சொல்லி சர்ச் பார்க் ஸ்கூலில் சேர்க்காமல் கோபாலபுரத்தில் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கிற சின்ன ஸ்கூலிலேயே சேர்த்து விட்டார்’’என்கிறார்.

பள்ளிக்காலத்து நண்பர்கள் பற்றி கேட்க ,  ’’என்னுடன்  நான்கைந்து நண்பர்கள் இருப்பார்கள்.  அவர்களுடன் அடிக்கடி சினிமாவுக்கு போவது உண்டு.  ஸ்கூலை கட் பண்ணி விட்டு கூட சினிமாவுக்கு போவோம்.   நாங்க சைக்கிளில்  டபுள்ஸ் போவோம்.   எம்ஜிஆர் படம் பார்க்க சைக்கிளில் டபுள்சில் போனோம்.  புதிய பூமி படம் ஓடிக் கொண்டிருந்தது.  அந்த படம் பார்க்க ஆவலில் சென்றபோது டி1 போலீஸ் ஸ்டேஷன் அருகே போலீசார் எங்கள் சைக்கிளை நிறுத்தி விட்டார்கள்.   அப்போது சைக்கிளில் டபுள்ஸ் போகக்கூடாது. 

sg

 எங்களை பிடித்து ஸ்டேஷனில் வைத்து விட்டார்கள்.  வேடிக்கையான சம்பவம் நடந்தது.  என்னுடைய நண்பருடைய பெயரை கேட்டாங்க.  அவங்க முகவரியை கேட்டு எழுதிக்கிட்டாங்க.  அடுத்து என்னுடைய பெயர் முகவரியை கேட்டார்கள்.  என்னுடைய பெயரை கேட்டாங்க . நான் மு. க .ஸ்டாலின் என்று சொன்னேன். அப்பா பெயர் என்ன என்று கேட்டார்கள் .  மு. கருணாநிதி என்று சொன்னேன்.   அட்ரஸ் என்ன என்று கேட்டார்கள் நான் சொன்னேன்.   அப்பா எங்கே வேலை பார்க்கிறார் என்று கேட்டார்கள் கோட்டையில் வேலை பார்க்கிறார் என்று சொன்னேன்.   என்ன வேலை செய்கிறார் என்று கேட்டார்கள். பொதுப்பணித்துறை அமைச்சராக இருக்கிறார் என்று சொன்னதும் அதிர்ச்சி அடைந்து,  இதை முதலிலேயே சொல்லக்கூடாதா என்று வருத்தப்பட்டார்கள்.  

 அதை எல்லாம் சொல்ல விரும்பவில்லை.  நீங்கள் என்ன பணிஸ்மெண்ட் கொடுக்க விரும்புகிறீர்களோ அதை கொடுங்கள் என்று சொன்னேன்.  அவர்கள் கொஞ்ச நேரம் ஸ்டேஷனில்  உட்கார வைத்துவிட்டு அப்புறம் அனுப்பி விட்டார்கள்’’ என்று சிரித்தவரிடம்,    ’’நீங்க அப்பா செல்லமா? அம்மா செல்லமா? என்ற கேள்விக்கு,  ’’அம்மா செல்லம்’’ என்று சொல்லிவிட்டு மனதார சிரிக்கிறார் முதல்வர்.