தீர்ப்பு வரும் போதெல்லாம் அண்ணாமலை அவசரப் பயணமாக டெல்லிக்கு விரையும் மர்மம் என்ன?

 
o

அதிமுக  பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து  ஓபிஎஸ் ஆதரவாளார்களான  மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்திலிங்கம், ஜே..சி.டி.பிரபாகர் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.  இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற  நீதிபதி குமரேஷ்பாபு  முன் விசாரணைக்கு வந்தது. முதலில் தனது வாதங்களை முன்வைத்த ஓபிஎஸ் தரப்பு, பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடுவதற்கான நிபந்தனைகளை நீக்கினால் போட்டியிடத் தயார், வழக்கையும் வாபஸ் பெற தயார் என அறிவித்தது. 

m

தொடர்ந்து ஈபிஎஸ் தரப்பு, ஓபிஎஸ் தனக்கென தனி கட்சியை நடத்தி வருகிறார், அவர் எங்களை நீக்கியுள்ளார், நிர்வாகிகளை நியமித்திருக்கிறார். எடப்பாடி பழனிசாமி தான் இடைக்கால பொதுச்செயலாளர் என உலகத்துக்கே தெரியும், 1977 முதல் கட்சியில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராகவும், நிதி அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். பொதுக்குழு உறுப்பினர்களின் குரலை ஒடுக்கும் வகையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஏற்கனவே உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டது. நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளது. கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவேண்டும், நிறைய கட்சி பணிகள் உள்ளது. எனவே பொதுச்செயலாளர் தேர்தல் அவசியம் என வாதிட்டது.

இதனை கேட்ட நீதிபதி குமரேஷ் பாபு இருதரப்பும் எழுத்துப்பூர்வ வாதங்களை வெள்ளிக்கிழமை காலைக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டு தீர்ப்பு தேதியை ஒத்திவைத்தார்.

இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவசர பயணமாக டெல்லி விரைந்துள்ளார்.  இதுகுறித்து ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் கீழ்க்கண்டவாறு தனது வலைத்தளத்தில் பதிவிட்டு தனது சந்தேகத்தை எழுப்பி இருக்கிறார்.

#திகில்பயணங்களில்
உச்சநீதி
மன்றத்திலோ
அல்லது
உயர்நீதி
மன்றத்திலோ
தீர்ப்பு
வருவதற்கு
முன்பெல்லாம்
அண்ணா
மலை
அவசரப் பயணமாக
டெல்லிக்கு
விரைகிறாரே
என்னவாக
இருக்கும்..