அதிமுகவின் எதிர்காலம் எப்படி? ஜெ., உதவியாளர் கணிப்பு

 
eo

தற்போதைய சூழலில் அதிமுகவின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை எடுத்துச் சொல்லி இருக்கிறார் மறைந்த முன்னாள் முதல்வரும் அதிமுகவின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன்.  அதிமுகவின் எதிர்காலம் குறித்த பூங்குன்றன் கணிப்பில் கவலையும் ஏக்கமும் தெரிகிறது.

poo

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று அதிமுகவின் இரட்டை  இலைகளாக இருந்த பன்னீர்செல்வமும் பழனிச்சாமியும் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் எதிரெதிர் துருவங்களாக நிற்கிறார்கள். 

 தனது ஆதரவாளர்களை திரட்டி தான்தான் அதிமுகவின் பொதுச்செயலாளர் என்று பொதுக்குழுவை கூட்டி அறிவிக்கிறார் பழனிச்சாமி.  அது போலி பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்கிறார் பன்னீர்செல்வம்.  தனது பலத்தை நிரூபிக்க திருச்சியில் மாநாடு நடத்துகிறார் பன்னீர்செல்வம் . அதே போல் தனது பலத்தை நிரூபிக்க மதுரையில் மாநாடு நடத்த எல்லா ஏற்பாடுகளையும் செய்து வருகிறார் பழனிச்சாமி . 

இருவரும் ஒற்றுமையாக இருந்தால் தான் எதிர்க்கட்சிகளை வெல்ல முடியும் என்று இடையில் நின்று பாஜக எவ்வளவோ முயன்று பார்த்தும் பழனிச்சாமி இணைய முடியாது என்று பிடிவாதமாக இருப்பதால்,  பன்னீர்செல்வம் -பழனிச்சாமி இணைப்பை பாஜக முன்னெடுக்காது.  அதை அவர்களே பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கடுப்பாகி விட்டார் மத்திய உள்துறை அமைச்சரும் , தேசிய பாஜகவின் முன்னாள் தலைவருமான அமித்ஷா.

poo

இந்த சூழலில் வரும் நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்தால் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.  இந்த நிலையில் ஆதிமுகவில் எதிர்காலம் எப்படி? என்று கேள்வி கேட்டு , அதற்கு தானே பதிலளித்திருக்கிறார் மறைந்த முன்னாள் முதல்வரும் அதிமுகவின் பொதுச் செயலாளருமானஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன்.

அதிமுக-வின் எதிர்காலம் எப்படி? என்று கேட்டு,   ‘’இபிஎஸ் அவர்களை ஓபிஎஸ் அவர்களும், ஓபிஎஸ் அவர்களை ஈபிஎஸ் அவர்களும் எதிர்த்துக் கொண்டிருக்கும் வரை அதிமுகவின் எதிர்காலம் கேள்விக்குறிதான்? எதிர்க்கட்சியை முழுமையாக எதிர்க்கத் தொடங்கினால்தான் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும். 

அண்ணன் - தம்பி ஒற்றுமையாக இருக்கும் வரை ஊரில் எதிர்க்கத் தயங்குவார்கள். அதுவே இருவரும் பிரிந்து விட்டார்கள் என்றால் பயந்தவன் கூட எதிர்க்கத் தொடங்கிவிடுவான் என்பது நாம் பார்த்துக் கொண்டிருக்கும் உண்மை..! பிரிந்து கிடப்பதால் எதிர்க்க வேண்டியவர்களை எதிர்க்க முடியாமல் நமக்கு வேண்டியவர்களை எதிர்த்துக் கொண்டிருக்கிறோம். இது மாறும் போது எதிர்காலமும் மாறும்..!’’என்கிறார்.