நடந்தது என்ன? வானதி கணவர் சீனிவாசனுக்கு தேசிய அளவில் பொறுப்பு

 
vச்

விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில பொறுப்பில் இருந்து பாஜக மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் கணவர் சீனிவாசன் நீக்கப்பட்டதால் அவருக்கு பதில் வாஸ்து நிபுணர் ஆண்டாள் சொக்கலிங்கம் நியமிக்கப்பட்டதால் வானதி சீனிவாசன் அதிருப்தி அடைந்திருக்கிறார்.  இதனால் அவர் திமுகவில் இணைய அமைச்சர் செந்தில் பாலாஜி மூலமாக பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்.  ஸ்டாலின் அமைச்சரவையில் கோவை தெற்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினரான வானதி சீனிவாசனுக்கு இடம் ஒதுக்கவும் உறுதி அளிக்கப்பட்டு இருக்கிறது.  இது குறித்த பேரம் நடந்த வருகிறது என்று நேற்று பரபரப்பு தகவல்கள் வெளியாகின.

ச்ர்

 ஆனால் என்ன நடந்தோ தெரியவில்லை.  மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து அகில இந்திய பொறுப்பு சீனிவாசனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.   மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கடந்த வாரம் நடந்த விஸ்வ ஹிந்து பரிஷத் அகில இந்திய நிர்வாகிகள் கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

 ஆர். எஸ். எஸ். மாணவர் அமைப்பான ஏபிவிபியின் மாநில செயலாளர் ஆக இருந்த சீனிவாசன்,  கடந்த 20 ஆண்டுகளாக விசுவ இந்து பரிசத்தில் பல்வேறு பொறுப்புகளை வைத்து வந்திருக்கிறார்.  5 ஆண்டுகளுக்கும் மேலாக விஸ்வ ஹிந்து பரிஷத் மாநிலத் தலைவராக இருந்திருக்கிறார்.  தற்போது அவர் விஸ்வ ஹிந்து பரிஷத் அகில இந்திய வழக்கறிஞர் பிரிவின் இணை அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.  அவர் வகித்து வந்த விஸ்வ இந்து பரிசத் மாநிலத் தலைவர் பொறுப்பு வாஸ்து நிபுணர் ஆண்டாள் சொக்கலிங்கத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது.