அரசு அதிகாரிகள் சட்டத்தின்கீழ் பணியாற்ற மறந்து விட்டனர்.. மேற்கு வங்க கவர்னர் ஜெகதீப் தங்கர் குற்றச்சாட்டு

 
போஸ்ட் ஆபிஸ், ரப்பர் ஸ்டாம்ப் போல் கவர்னர் இருக்க வேண்டும் என மம்தா விரும்புகிறார்… ஜகதீப் தங்கர் ஆவேசம்

அரசு அதிகாரிகள் சட்டத்தின்கீழ் பணியாற்ற மறந்து விட்டனர் என்று மேற்கு வங்க முதல்வர் ஜெகதீப் தங்கர் குற்றம் சாட்டினார். 

மேற்கு வங்க சட்டப்பேரவையில் உள்ள டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் சிலைக்கு அம்மாநில கவர்னர் ஜெகதீப் தங்கர் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின் ஊடகங்களிடம் கவர்னர் ஜெகதீப் தங்கர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: எல்லோரும் சட்டப்படி செயல்பட வேண்டும் என்று நான் நிறைய முயற்சித்தேன். அரசு அதிகாரிகள் சட்டத்தின்கீழ் பணியாற்ற மறந்து விட்டனர். ஆனால் கவர்னர் மாளிகையால் என்ன செய்ய முடியும் என்று அவர்களுக்கு தெரியவில்லை.

பீமன் பானர்ஜி

மாநில தலைமை செயலாளர் எனது அழைப்பை எடுக்கவில்லை. என்னால் எந்த மசோதாவும் நிறுத்தி வைக்கப்படவில்லை. நான் எப்போதும் அனைத்து மசோதாக்களையும் 48 மணி நேரத்துக்குள் நிறைவேற்றுவேன். எந்த மசோதாவும் என் மேஜையில் இல்லை. நான் ஒருபோதும் பெறாத சில விளக்கங்களை சட்டப்பேரவையில் இருந்து பெற விரும்பினேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ராம் நாத் கோவிந்த்

கவர்னர் ஜெகதீப் தங்கர் ஊடகங்களில் பேசிய தொடர்பாக அம்மாநில சட்டப்பேரவையின் சபாநாயகர் பீமன் பானர்ஜி கூறுகையில், இது போன்ற கருத்துகளுக்கு இந்த மேடையை (சட்டப்பேரவை வளாகம்) கவர்னர் பயன்படுத்துவார் என்பது எங்களுக்கு தெரியாது. அவர் செய்தியாளர் சந்திப்பை கவர்னர் மாளிகையில் செய்திருக்கலாம், சட்டப்பேரவையில் அல்ல. இது அரசியலமைப்பிற்கு எதிரானது. கவர்னரால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள முக்கியமான மசோதாக்கள் தொடர்பாக குடியரசு தலைவருக்கு எழுதப்பட்ட அனைத்து உண்மைகளும் உண்மை என்று தெரிவித்தார்.