2021ல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை இல்லாமல் செய்வதுதான் எங்கள் இலக்கு… மேற்கு வங்க பா.ஜ.க. தலைவர்

2021ல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை இல்லாமல் செய்வதுதான் எங்கள் இலக்கு… மேற்கு வங்க பா.ஜ.க. தலைவர்

மேற்கு வங்கத்தில், 2021 சட்டப்பேரவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை இல்லாமல் செய்வதுதான் எங்கள் இலக்கு என்று அம்மாநில பா.ஜ.க. தலைவர் தெரிவித்தார்.

மேற்கு வங்கம் சிலிகுரியில் உள்ள புதிய ஜல்பைகுரி ரயில்வே ஜங்ஷன் அருகே பா.ஜ.க. சார்பில் பேரணி நடைபெற்றது. அந்த பேரணியில் கலந்து கொண்ட அம்மாநில பா.ஜ.க. தலைவர் திலிப் கோஷ் பேசுகையில் கூறியதாவது: திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் வன்முறை அரசியல் தொடரும். பா.ஜ.க.வை தடுக்க அவர்களிடம் தந்திரோபாயங்கள் உள்ளன. ஆனால் அது காலப்போக்கில் பலவீனமடைந்துள்ளது.

2021ல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை இல்லாமல் செய்வதுதான் எங்கள் இலக்கு… மேற்கு வங்க பா.ஜ.க. தலைவர்
திலிப் கோஷ்

மேற்கு வங்கத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வருவோம். வளர்ச்சி நெருங்கி வருவதால், அவர்கள் கவலைப்படாமல் இதனை (பா.ஜ.க. தொண்டர்கள் மீது கல்வீச்சு) இதை செய்கிறார்கள். 2019ம் ஆண்டில் திரிணாமுல் காங்கிரஸை பாதியாக (நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. 18 இடங்களில் வெற்றி) 2021ம் ஆண்டில் முழுமையாக (சட்டப்பேரவை தேர்தல்) அவற்றை அழிப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

2021ல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை இல்லாமல் செய்வதுதான் எங்கள் இலக்கு… மேற்கு வங்க பா.ஜ.க. தலைவர்
பா.ஜ.க.

மேற்கு வங்கத்தில் 294 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அம்மாநில சட்டப்பேரவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரசுக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையிலான மோதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் தேர்தலில் குறைந்தபட்சம் 200 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என்று அண்மையில் அமித் ஷா உறுதியாக தெரிவித்தார். தற்போது பா.ஜ.க.வில் உள்ள சுவேந்து ஆதிகாரி, நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜியை குறைந்தபட்சம் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கவில்லை என்றால் அரசியலிருந்து விலகி விடுகிறேன் என்று சவால் விடுத்தது குறிப்பிடத்தக்கது.