திரிணாமுல் காங்கிரஸின் உண்மையான அர்த்தம் மொத்த பணம் கட்டிங்.. பா.ஜ.க. கிண்டல்

 
திரிணாமுல் காங்கிரஸ் திரிணாமுல் காங்கிரஸ்

திரிணாமுல் காங்கிரஸின் உண்மையான அர்த்தம் மொத்த பணம் வெட்டு, திட்டங்களில் பணம் சம்பாதிப்பது என்று பா.ஜ.க. கிண்டல் செய்துள்ளது.

கோவாவில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் (டி.எம்.சி.)  முதல் முறையாக போட்டியிட உள்ளது. இதனால் திரிணாமுல் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜி கோவாவில் தனது கட்சி தொண்டர்களை சந்தித்து நம்பிக்கை விதைத்து வருகிறார். நேற்று கோவாவின் பானாஜியில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களை சந்தித்தார். அப்போது அவர்கள் மத்தியில் மம்தா பானர்ஜி கூறியதாவது: 

மம்தா பானர்ஜி

டி.எம்.சி. என்றால் கோயில்-மசூதி-சர்ச். நாம் பா.ஜ.க.வுடன் போராடுகிறோம். வெற்றி வாய்ப்பு உள்ளதா? நாம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உங்களிடம் இருக்கிறதா? நீங்கள் நம்பிக்கையுடன் இருந்தால், பின்வாங்காதீர்கள். முன்னேறிச் செல்லுங்கள். இவ்வாறு  அவர் தெரிவித்தார். டி.எம்.சி. என்றால் கோயில்-மசூதி-சர்ச் என்று மம்தா பானர்ஜி கூறியதை பா.ஜ.க. விமர்சனம் செய்துள்ளது.

சுகந்தா மஜூம்தார்

மேற்கு வங்க பா.ஜ.க. தலைவர் சுகந்தா பஜூம்தார் கூறியதாவது: திரிணாமுல் காங்கிரஸின் உண்மையான அர்த்தம் மொத்த பணம் வெட்டு, திட்டங்களில் பணம் சம்பாதிப்பது. கோயில், சர்ச் மற்றும் மசூதியை தவிர்த்து குருத்வாரா எங்கே உள்ளது? இது மதச்சார்பின்மை உள்ளது. மம்தா பானர்ஜி அரசியல் சுற்றுலா மட்டுமே செய்கிறார். அதனால்தான் அவர் கோவா செல்கிறார். அவர் தனது எம்.எல்.ஏ.க்களிடம் கத்துகிறார், மக்களை முட்டாளாக்குகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.