சீமானை சும்மா விடமாட்டோம் -தமிழக மகிளா காங்கிரஸ் செயற்குழுவில் தீர்மானம்

 

சீமானை சும்மா விடமாட்டோம் -தமிழக மகிளா காங்கிரஸ் செயற்குழுவில் தீர்மானம்

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளரா பாலியல் சம்பவங்களின் ஒருங்கிணைப்பாளரா என்று தமிழக மகிளா காங்கிரஸ் கட்சி சீமானை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது.

சீமானை சும்மா விடமாட்டோம் -தமிழக மகிளா காங்கிரஸ் செயற்குழுவில் தீர்மானம்

தமிழக பாஜக பொதுச் செயலாளராக இருந்த கே. டி. ராகவன் அந்தரங்க வீடியோவினை அதே கட்சியைச் சேர்ந்த மதன் ரவிச்சந்திரன் வெளியிட்டார். இதையடுத்து கே.டி. ராகவனை கைது செய்ய வேண்டுமென்று காங்கிரஸ் எம்பி ஜோதிமணி வலியுறுத்தி வந்த நிலையில், ராகவன் குறித்த அந்த வீடியோ பற்றி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, உலகத்தில் யாரும் செய்யாததையா ராகவன் செய்துவிட்டார். அவரின் அந்தரங்கத்தை அவரின் அனுமதி இல்லாமல் வீடியோ எடுத்து வெளியிட்ட அந்த நபரைத் தான் கைது செய்ய வேண்டும் என்றார்.

சீமானை சும்மா விடமாட்டோம் -தமிழக மகிளா காங்கிரஸ் செயற்குழுவில் தீர்மானம்

சீமானின் இந்த பதிலை கேட்டு கொந்தளித்த ஜோதிமணி, பாலியல் குற்றவாளிகளுக்கு வக்காலத்து வாங்கும் சீமானை முதலில் கைது செய்ய வேண்டும். அவர் பிஜேபியின் பி டீம் என்று கடுமையாக விமர்சித்து இரண்டு பக்க அறிக்கை விடுத்தார். இது குறித்து சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, காங்கிரஸ் கட்சியின் தலைவர் அதாவது ராஜீவ்காந்தி அனுப்பிய ராணுவம் ஈழத்தில் பல்லாயிரக்கணக்கான பெண்களை பாலியல் வன்புணர்வு செய்து கதற கதற கொலை செய்யப்பட்டதை பற்றி ஏன் ஜோதிமணி பேசவில்லை. அதை ஏன் ஜோதிமணி கண்டிக்கவில்லை. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளே எதுவும் பேசாமல் இருக்கும்போது ஜோதிமணி மட்டும் ஏன் இப்படி பேசிக் கொண்டிருக்கிறார். என் வளர்ச்சி கண்ணை உறுத்துகிறது . அதனாலதான் ராகவன் பற்றி அறிக்கை விடாமல் என்னை கண்டித்து இரண்டு பக்க அறிக்கை விடுகிறார் என்றார் சீமான்.

சீமானை சும்மா விடமாட்டோம் -தமிழக மகிளா காங்கிரஸ் செயற்குழுவில் தீர்மானம்

சீமானின் இந்த பேச்சுக்கு தமிழக மகிளா காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மகிளா காங்கிரஸ் தலைவர் சுதா ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்த கூட்டத்தில் 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாலியல் சம்பவங்களின் ஒருங்கிணைப்பாளராக மாறிவிட்டார் என்று ஒரு தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது .

அக்கூட்டத்தில் பேசிய சுதா ராமகிருஷ்ணன், கே. டி. ராகவன் தனது கட்சி பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வீடியோ பெண்களுக்கு அச்சுறுத்தல் பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த பிரச்சினை தொடர்பாக மௌனம் சாதிக்கும் ராகவனுக்கு துணைபோகும் அண்ணாமலை தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம். இந்த விவகாரத்தில் சீமானை சும்மா விடமாட்டோம் சீமானின் பேச்சைக் கண்டித்து மகிளா காங்கிரஸ் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.