திமுக, அதிமுக, தவெகவுடன் களமாடிய வி. எஸ். பாபு!
திராவிட இயக்கங்கள் முதல் தவெக வரை வி.எஸ்.பாபு களமாடியுள்ளார்.

வி.எஸ்.பாபுவின் அரசியல் பயணம்
2006 ஆம் ஆண்டு திமுக சார்பில் புரசைவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல் முறையாக MLA-வாக அரியணை ஏறினார். அதன்பின் அதே ஆண்டு வடசென்னை மாவட்ட திமுக செயலாளராக பொறுப்பேற்றார். 2011 ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பில் புரசைவாக்கம் தொகுதி நீக்கப்பட்டு கொளத்தூர் தொகுதி உருவானது. மு.க.ஸ்டாலின் போட்டியிட்டதால் பாபுவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
2011ல் திமுக தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் அதிமுகவில் இணைந்தார். 2016 ஆம் ஆண்டு அதிமுகவில் வடசென்னை வடக்கு - மேற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாகப் பணியாற்றினார். 2018 டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாகச் செயல்பட்டதால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். 2022 ஆம் ஆண்டு இபிஎஸ் முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்தார். 2025 ஆம் ஆண்டு அதிமுகவின் வடசென்னை வடக்கு - மேற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.
2026 பிப்.7ஆம் தேதி விஜய் முன்னிலையில் தவெக கட்சியில் இணைந்தார். 2026 ஏப்ரலில் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலினை 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 2026 மே மாதம் கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்றார். 2026 செப்டம்பர் 9ல் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை MGM மருத்துவமனையில் அனுமதக்கப்பட்ட வி. எஸ். பாபு, 2026 நவம்பர் 19 ஆம் தேதி பிற்பகல் 2.24 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

