வன்முறை காடு - கட்டப்பஞ்சாயத்து காடு : பாஜக - விசிக மோதல்

 
t


விடுதலை சிறுத்தைகள் கட்சியின்  தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன்,  பாஜகவையும் பாஜக தலைமையிலான மத்திய அரசையும் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார்.   குறிப்பாக தமிழகத்தில் பாஜகவின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்து எதிர்த்து வருகிறார்.  இதற்கு தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தொடர்ந்து அவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறார்.

n

விரட்டியடிப்போம்! விரட்டியடிப்போம்!
வெறுப்பு அரசியலை 
விதைக்கும் கும்பலை 
விரட்டியடிப்போம்!  என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பேச்சுக்கு,

துரத்தியடிப்போம்!துரத்தியடிப்போம்!
சாதி வெறி அரசியலை 
பரப்பும் தீய சக்தியை 
துரத்தியடிப்போம்! என்று பதிலடி கொடுத்திருக்கிறார் தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி.

வடஇந்திய மாநிலங்களை 
வன்முறை காடாக்கி - 
ஆதாயம் தேடுவது போல் 
தமிழ்நாட்டையும் குறிவைக்கும் 
சதியை முறியடிப்போம் ! என்று சொன்ன திருமாவுக்கு,

வட தமிழக மாவட்டங்களை 
கட்டப்பஞ்சாயத்து காடாக்கி - 
ஆதாயம் தேடுவது போல் 
ஒட்டு மொத்த தமிழகத்தை குறிவைக்கும் 
சதியை முறியடிப்போம்! என்று பதிலடி கொடுத்திருக்கிறார் நாராயணன் திருப்பதி.