கைவிரித்த தவெக- திமுகவில் இணைகிறார் விஜயபாஸ்கர்?

 
vijayabaskar

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நாளை திமுகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல்..!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்ததை தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எதிராக ஒரு தரப்பினர் போர் கொடி தூக்கினர். அவர்களை எடப்பாடி பழனிச்சாமி கட்சியிலிருந்து நீக்கினார். தொடர்ந்து நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாய்ப்பளித்ததாக கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க எடப்பாடி அணியினர் கடிதம் அளித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த எம்எல்ஏக்கள் பலர் அதிமுக எடப்பாடி அணிக்கு த மீண்டும் திரும்பினார். ஆனால் விஜயபாஸ்கர் சி வி சண்முகம் அதிமுகவிற்கு செல்லாமல் தொடர்ந்து மௌனம் காத்து வருகின்றனர். 

இந்த நிலையில் விஜயபாஸ்கர் தமிழக வெற்றி கழகத்தில் இணைவதற்காக பேச்சுவார்த்தை நடத்தினார். அவர் மீது ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவரை கட்சியை சேர்க்கவும் அமைச்சர் பதவி வழங்கவும் ஆட்சேபம் எழுந்தது. ஆனாலும் கட்சியை சேர்த்து அவருக்கு எம்எல்ஏ பதவி வழங்கலாம் என்று முதல்வர் விஜய் யோசித்தார். ஆனால் விஜயபாஸ்கர் கட்சி பதவி வேண்டும் என்று கேட்டதால் இழுபறி நீடித்து வந்தது. இந்த நிலையில் விஜயபாஸ்கரை திமுக மேலிடம் அணுகியது. விஜயபாஸ்கர் பச்சை கொடி காட்டியதை தொடர்ந்து அவர் திமுகவில் இணையவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.