ஆதார பலத்தில் கை வைக்கும் விஜய்! அதிர்ந்து நிற்கும் ஆளுங்கட்சி

 
வ

திமுகவின் ஆதாரபலத்தில் விஜய் கை வைத்திருப்பதால் அதிர்ந்து நிற்கிறது ஆளுங்கட்சி.  

திமுகவின் ஆதார பலமாக இருப்பது தலித் மற்றும் சிறுபான்மையினர் வாக்குகள் தான்.  திமுகவும் இந்த இருதர தரப்பினருக்கும் மிகவும் பக்கபலமும் ஆதரவாக இருந்து வருவதால் அவ்விரு தரப்பும் திமுகவுக்கு ஆதரவாக இருந்து வருகிறது.  பல்வேறு இக்கட்டான நெருக்கடியான சூழ்நிலைகளிலும் கூட சிறுபான்மையினரையும் தலித் சமூகத்தையும் திமுக கைவிட்டதில்லை .  

வ்

திமுகவுக்கு இப்படி ஆதார பலமாக இருக்கும் இந்த இரண்டு தரப்பையும் குறிவைத்து களம் இறங்கி இருக்கிறார் நடிகர் விஜய். இது ஆளுங்கட்சியை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

 ஆடியோ விழாக்களில் மட்டும் அரசியல் பேசி வந்த விஜய் , அவரது மன்றத்தினரை மெல்ல மெல்ல தேர்தல் களத்திலும் இறக்கி ஆழம் பார்த்து வந்தார்.  இப்போது முழுவதுமாக  அரசியல் களத்தில் குதிக்க முடிவெடுத்து விட்ட அவர்,  முதற்கட்டமாக மக்கள் நலப் பணிகளை செய்யுமாறு மன்றத்தினரை  முடுக்கிவிட்டு இருக்கிறார். அடுத்து அம்பேத்கர்,  தீரன் சின்னமலை  உள்ளிட்டோருக்கு மரியாதை செலுத்துமாறு மன்றத்தின் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார். மன்றத்தினரும் உத்தரவின்படி செய்து முடித்துள்ளார்கள்.

ப்

 இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்,  அம்பேத்கர் பெயரை உச்சரிக்காமல் அரசியல் செய்ய முடியாத சூழல் உருவாகிவிட்டது. நடிகர் விஜய் தன் ரசிகர்களுக்கு அம்பேத்கர் பிறந்த நாளை கொண்டாட கட்டளையிட்டு இருப்பதை பாராட்டுகிறேன் என்று கூறியிருக்கிறார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  விஜய் அரசியலுக்கு வந்தால் வலிமையாக இருக்கும் என்று ஆதரவு தெரிவித்திருக்கிறார்.  புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி , தலித் மக்களை குறிவைத்து விஜய் மக்கள் இயக்கம் இயங்குகிறது என்று தெரிவித்திருக்கிறார்.

அ

 இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடத்தி ஏழை முஸ்லிம்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குமாறு தன் மன்றத்தினருக்கு விஜய் அடுத்த உத்தரவையும் பிறப்பித்திருக்கிறார்.  அந்த உத்தரவை அடுத்து புதுக்கோட்டை மாவட்ட தலைமை விஜய் மக்கள் இயக்கம் நடத்திய சமத்துவ இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பாதிரியார்கள்,  ஆன்மீக சொற்பொழிவாளர்கள் பங்கேற்று உள்ளனர் . இதன் மூலம் திமுகவின் ஆதார பலமாக இருக்கும் தலித், சிறுபான்மையினரை விஜய் குறி வைத்திருப்பது திமுக வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.