தேர்தலுக்கு ஆயத்தமாகும் விஜய்! ஒரே நாடு ஒரே தேர்தலுக்கும் தயார்

 
விஜய்

ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முன்னெடுப்பை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளதால் விரைவில் நடிகர் விஜய் தமது அரசியல் கட்சியை பதிவு செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஓட்டுக்கு காசு வேண்டாம் என்ற வலியுறுத்தலே கல்வியை முழுமையாக்கும்' - நடிகர்  விஜய் மாணவர்களுக்கு அறிவுறுத்தல்!

தமிழகத்தின் முன்னணி கதாநாயகனான விஜய், திரைப்பயணத்திலிருந்து அரசியல் பயணத்தையும் தொடங்கியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தொகுதி வாரியாக 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் கொடுத்து நடிகர் விஜய் கௌரவித்தார். இதனை தொடர்ந்து 234  சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர்களுடன் நடிகர் விஜய் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். 

தனித்து போட்டி: நடிகர் விஜய் அறிவிப்பு | | Dinamalar

ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முன்னெடுப்பை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளதால் விரைவில் நடிகர் விஜய் தமது அரசியல் கட்சியை பதிவு செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரே நேரத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வந்தால் அதில் விஜய் மக்கள் இயக்கம் களமிறங்குவது உறுதி என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2019,2020,2022 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்ற நிலையில், தற்போது கட்சியாக பதிவு செய்து இனிவரும் தேர்தல்களை சந்திக்க திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.