விசிகவை கழட்டிவிட்டு பாமக கூட்டணியில் சேர்க்க விஜய் திட்டம்

 
விசிகவை கழட்டிவிட்டு பாமக கூட்டணியில் சேர்க்க விஜய் திட்டம்

பாமகவையும் தவெக கூட்டணிக்குள் கொண்டு வர பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

முதல்வர் விஜய் – அன்புமணி சந்திப்பு.. நடந்தது என்ன?


2026 சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், பெரும்பான்மை இல்லாததால் கூட்டணி ஆட்சியை அமைத்த தவெக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் செயல்பட்டு வருகிறது. ஆனால் கூட்டணிக்குள் கருத்து வேறுபாடுகள் அதிகரித்துள்ள நிலையில், விஜய் தனது அரசை நிலைநிறுத்த புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைந்து வரும் சூழலில், பாமகவையும் கூட்டணிக்குள் கொண்டு வர பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  திருமாவளவனின் மாறான கருத்துகள் கூட்டணிக்குள் நம்பிக்கையின்மையை உருவாக்கியுள்ளது. அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தும் அரசை விமர்சிப்பது விஜய்க்கு விருப்பமல்ல என கூறப்படுகிறது. இதனால் விசிகக்கு மாற்றாக பாமகவை கொண்டு வர விஜய் திட்டமிட்டுள்ளார்.

இந்த சூழலில், விசிக சார்பில் அமைச்சராக இருக்கும் வன்னியரசு கவலையில் இருப்பதாக தெரிகிறது. கூட்டணி உடைந்தால் அமைச்சர் பதவி பறிபோகுமோ என்கிற அச்சம் அவருக்கு உள்ளது.