விஜய்யின் அடுத்தடுத்த உத்தரவு! தூள் கிளப்பும் ரசிகர்கள்

 
ப்

அம்பேத்கரின் பிறந்தநாளில் மாவட்டம் தோறும் தனது மன்ற நிர்வாகிகள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என்று விஜய் உத்தரவிட்டிருந்ததை அடுத்து நிர்வாகிகளும் அப்படியே செய்ய,  இதே போன்று மற்ற தலைவர்களுக்கும் மரியாதை செலுத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. அடுத்ததாக தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்துள்ளனர் விஜய் மன்றத்து நிர்வாகிகள்.

வ்

 அதிமுகவும் திமுகவும்  உறுப்பினர் சேர்க்கையில் தீவிரம் காட்டி வரும் நிலையில், விஜய் மக்கள் இயக்கத்திற்கு புதிய உறுப்பினர் சேர்ப்பு பணிகளை தொடங்க உத்தரவிட்டிருக்கிறார் நடிகர் விஜய்.  ஆன்லைன் மூலமாக இந்த புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு பணிகள் நடந்து வருகின்றன .

அதுமட்டுமல்லாது,  அனைத்து மாவட்டங்களிலும் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி அம்பேத்கரின் 132 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவிக்க வேண்டும் என்று விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டிருந்தார் .  இதற்காக மாவட்டம் தோறும் நடக்கும் இந்த விழாவில் அனைத்து அணி தலைவர்களும்,  நிர்வாகிகளும் பங்கேற்க வேண்டும் என்றும்,  இதற்காக முன்கூட்டியே காவல்துறை அனுமதி பெற வேண்டும் என்றும் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்லி ஆனந்த்,  நிர்வாகிகளுக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.  அதன்படியே நிர்வாகிகளும் காவல்துறையின் அனுமதி வாங்கி அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

வ்வ்

 அரசியல் கனவில் இருக்கும் விஜய்,  அரசியலுக்கு வரும் முன்பே தலித் சமுதாயத்தின் ஆதரவை பெறும் நோக்கில் தான் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார் என்ற பேச்சு எழுந்தது.  அம்பேத்கருக்கு மட்டும்தான் இந்த மரியாதையா?  இது என்ன மாதிரியான அரசியல்? என்ற கேள்விகள் எழுந்தன. 

இந்த நிலையில், சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை சிலைக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டிருக்கிறது.  ஈரோட்டில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்லி ஆனந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார்.  அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது விஜய் உத்தரவின் பேரில்தான் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம் என்று தெரிவித்துள்ளார். விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறுமா என்ற கேள்விக்கு,  அது குறித்து விஜய் அறிவிப்பார் என்று தெரிவித்திருக்கிறார் . 

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் விஜய் மக்கள் இயக்கம் நாடாளுமன்றத்தை தேர்தலை குறி வைத்துதான் களம் இறங்கி இருக்கிறது என்ற பேச்சு எழுந்திருக்கிறது.