ஜூலையில் விஜய் புதுக்கட்சி! அதிமுகவுடன் கூட்டணி

 
v

இந்த முறை கட்சி தொடங்குவதில் விஜய்யும் அவரது தரப்பினரும் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.   இதனால்தான் வரும் ஜூலைக்குள் விஜய் கட்சி தொடங்க போகிறார்.  நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெறப் போகிறார்.  புதுச்சேரி மாநிலத்தில் என் .ஆர். காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்கப் போகிறார் என்று விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் மத்தியில் தகவல் பரவிக் கொண்டிருக்கிறது .

vi

ஆரம்பத்திலிருந்து திமுகவுடன் விஜய்க்கு ஒரு மோதல் போக்கு இருந்து வருகிறது.  இது வாரிசு திரைப்பட நேரத்தில் மிகவும் உச்சத்திற்கு சென்றது என்கிறார்கள். இதனால் திமுகவுடன் விஜய் எப்போதும் கூட்டணி அமைக்கப் போவதில்லை என்று முடிவாகிவிட்டது.    தமிழகத்தை பொறுத்தவரைக்கும் அவர் அதிமுகவுடன் தான் கூட்டணி வைக்கப் போகிறார் என்று தகவல்.  புதுச்சேரி மாநிலத்தை பொறுத்தவரைக்கும் முன்னாள் முதல்வர் என்.ரங்கசாமி விஜய்யின் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்து பேசி ஆலோசனை நடத்திச் சென்றிருக்கிறார்.  இதனால் விஜய் கட்சி தொடங்கினால் என்.ஆர். காங்கிரஸுடன் தான் கூட்டணி வைப்பார் என்று அழுத்தமாகச் சொல்லி வருகின்றனர் விஜய் மன்றத்தினர்.

 அண்மையில் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரை விஜய் ரகசியமாக சந்தித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியானது .  ஏற்கனவே ஊரக நகர் புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் போட்டியிட்டு வந்திருக்கிறார்கள்.  அதன் பின்னர் விஜய்க்கு கட்சி தொடங்குவதில் அதிக ஆர்வம் ஏற்பட்டு இருக்கிறது .

vr

 இதை அடுத்து ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி,  ஐஏஎஸ் அதிகாரி மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள்,  அரசியல் மூத்த பிரமுகர்கள்,  ஊடகவியலாளர்கள் என்று பலரிடமும் விஜய் ஆலோசனை கேட்டு இருக்கிறார் என்ற தகவல் பரவுகிறது.   ஆனால் விஜய் தரப்பில் இது அத்தனையும் பொய் என்று மறுப்பு தெரிவிக்கிறார்கள்.   அதேநேரம் விஜய் குடும்பத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் புதுச்சேரி மாநிலத்தில் முக்கிய பள்ளி ஒருவரை சந்தித்து கட்சி துவங்குவது குறித்து பேச்சு நடத்தி இருக்கிறார் என்று தகவல்.   அதனால் தான் வரும் ஜூலை மாதத்திற்குள் விஜய் கட்சி தொடங்க போகிறார்.  நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கிறார் .புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரசுடன் கூட்டணி அமைக்கிறார்.    அதே நேரம் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகலாமா என்றும்,  அதனால் கட்சி துவங்குவதை தள்ளிப் போடலாமா என்றும் விஜய் யோசனை செய்து வருகிறார் என்றும் மன்றத்தினர் இடையே தகவல் பரவுகிறது.