இந்தியாவில் இந்து சமூகம் பெரும்பான்மை என்பதால் முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள்.. வி.எச்.பி. பதிலடி

 
விஷ்வ இந்து பரிஷத்

இந்தியாவில் இந்து சமூகம் பெரும்பான்மை என்பதால்தான் முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள் என்று ஹமீது அன்சாரிக்கு வி.எச்.பி. பதிலடி கொடுத்துள்ளது.

அண்மையில் நடந்த இந்திய அமெரிக்க முஸ்லிம் கவுன்சில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் துணை குடியரசு தலைவர் ஹமீது அன்சாரி பேசுகையில், இந்து தேசியவாதம் கவலைக்குரிய விஷயம். நாட்டில் மக்கள் மத ரீதியாக பிரிக்கப்படுகிறார்கள். மக்கள் மத்தியில் தேசியம் தொடர்பாக சர்ச்சைகள் உருவாக்கப்படுகின்றன. குறிப்பாக ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள் தூண்டி விடப்படுகின்றனர். நாட்டில் சகிப்பின்மை தூண்டப்பட்டு பாதுகாப்பற்ற சூழல் உருவாக்கப்படுகிறது என்று தெரிவித்தார். ஹமீது அன்சாரியின் கருத்து சர்ச்சையை கிளப்பியுள்து. மேலும் பல தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

ஹமீது அன்சாரி

விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் இணை பொதுச் செயலாளர் சுரேந்திர ஜெயின் கூறியதாவது: இந்து தேசியவாதத்தால் முஸ்லிம் சமுதாயம் பாதுகாப்பற்றதாக உள்ளது என முன்னாள் துணை குடியரசு தலைவர் ஹமீது அன்சாரி கூறியது மிகவும் துரதிர்ஷ்டவசமானது மற்றும் கண்டனத்திற்குரியது. கடந்த காலத்தில் இந்திய துணை குடியரசு தலைவர் போன்ற உயர்ந்த பதவியில் இருந்தபோதும், இந்திய முஸ்லிம் சமுதாயத்தை தூண்டி விட முயற்சி செய்தார். நான் அவரிடம் கேட்க விரும்புகிறேன், முஸ்லிம்கள் நிம்மதியாக வாழும் முஸ்லிம்கள் பெரும்பான்மையான நாடு இருக்கிறதா?

சுரேந்திர ஜெயின்

பாகிஸ்தானில் ஷியாக்கள், அஹமதியா முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ்கிறார்களா? ஆப்கானிஸ்தான், சிரியா, ஈராக் ஆகிய நாடுகளின் உள்ளே என்ன நிலைமை? முஸ்லிம் சமுதாயம் இருக்குமு் மாதிரி அவர்களுக்கு இருக்கிறதா? நிம்மதியாக வாழ முடியுமா?. இந்தியாவில் இந்து சமூகம் பெரும்பான்மை என்பதால் முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள், தொழுகை மற்றும் நிகழ்ச்சிகள் செய்து வருகிறார்கள் என்பதை மறந்து விடக் கூடாது. முஸ்லிம் சமூகம் பெரும்பான்மையாக இருக்குமு் இடத்தில், அந்த சமுதாய மக்களின் நிலையை உலகம் முழுவதும் அறியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.