பொதுக்குழுவை கூட்டி இரட்டை இலையை கைப்பற்ற வேலுமணி திட்டம்?

 
sp velumani

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் தோல்விக்கு பிறகு அதிமுகவில் பெரும் கொந்தளிப்பு வெடித்துள்ளது. கடந்த முறை அதிமுக வென்ற இரு தொகுதிகளிலும், தற்போது 3-ம் இடத்திற்கு தள்ளப்பட்டதால் மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

Corruption case: EPS defends Velumani, claims DMK foisting false cases

இந்த நிலையில், எஸ்.பி.வேலுமணி கடந்த அக்.12 முதல் தொடர் ஆலோசனை நடந்து வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இந்த ரகசிய ஆலோசனையில் சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, கே.பி.அன்பழகன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றதாக கூறப்படுகிறது. ஆலோசனையில், தேர்தல் தோல்வி, தலைமையின் செயல்பாடு, கட்சியின் எதிர்காலம் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடர்ந்து பயணித்தால் கட்சியை மீட்க முடியாது என்ற கருத்து அதிருப்தி தரப்பில் வலுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதன் அடுத்தகட்டமாக, பொதுக்குழுவை கூட்ட வலியுறுத்தவும், எடப்பாடி முன்வராவிட்டால் விதிகளின்படி தனியாக பொதுக்குழுவை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்கவும் வேலுமணி தரப்பு திட்டமிடுவதாக பேசப்படுகிறது. கொங்கு மண்டலத்தில் வேலுமணிக்கு உள்ள செல்வாக்கு, மற்ற மண்டல தலைவர்களின் ஆதரவை பெறுமா என்பதே இப்போது மில்லியன் டாலர் கேள்வி. ஜெயலலிதா மறைவுக்கு பின் ஏற்பட்ட தலைமை போர், நீதிமன்றம், தேர்தல் ஆணையம் வரை சென்றது போல, இப்போது மீண்டும் அதே சூழல் உருவாகியுள்ளது. தற்போதைக்கு, எடப்பாடியே பொதுச்செயலாளராக தொடர்கிறார். ஆனால், எடப்பாடி தலைமை தொடருமா? வேலுமணி தலைமையில் புதிய அணுகுமுறை உருவாகுமா? என தமிழக அரசியல் களமே உற்றுநோக்கி காத்திருக்கிறது.