அதிமுகவில் நடக்கும் அதிகார சண்டைக்கும் பாஜகவுக்கும் சம்பந்தமில்லை- வானதி சீனிவாசன்

 
vanathi srinivasan

அதிமுக கட்சி குழப்பத்திற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை, குடியரசுத் தலைவர் வேட்பாளருக்காகவே அக்கூட்டத்திற்கு சென்றேன் என பிஜேபி தேசிய மகளிர் அணி செயலாளர் வானதி சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார்.

To take on Haasan in Coimbatore South, BJP banks on Vanathi's  development-oriented image | Deccan Herald

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி செயலாளர் வானதி சீனிவாசன் சாமி தரிசனம்  செய்தார்.தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், “ 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் குறித்து திமுக எம்பி ராஜா வெளியிட்ட அறிக்கைக்கு குற்றச்சாட்டிற்கு ஆதாரம் இருந்தால் நிரூபிக்கலாம். அதிமுகவில் நடக்கும் அதிகார சண்டை அவர்களின் உட்கட்சி பிரச்சனை. அதில் எப்போதும் பிஜேபி தலையிட போவதில்லை. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பாரதிய ஜனதாவை முன்னிலைப்படுத்தி கூட்டம் நடைபெற்றது. நானும் சட்டமன்ற கட்சி குழு தலைவரும் இந்திய குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் திரௌபதி முர்மூக்கு ஆதரவு கேட்டு அக்கூட்டத்தில் கலந்து கொண்டேன். இதைத் தாண்டி அதில் வேறு ஏதும் இல்லை.

ஸ்ரீரங்கம் கோவிலுக்கு முன் உள்ள பெரியார் சிலையை எடுக்க வேண்டும் என்று கனல் கண்ணன் கூறிய விவகாரத்தில் கடவுள் நிந்தனை செய்பவர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக தங்கள் நிலைப்பாடு இருக்கும். வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் பாரதிய ஜனதா கட்சி தற்போதைய விட அதிக இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும். தமிழகத்தில் கூட்டணி தொடர்பாக என்ற கேள்விக்கு கூட்டணி கொடுத்த விஷயங்களை தேசிய குழு தான் முடிவு செய்ய வேண்டும். மேலும் அமலாக்க துறையை பாரதிய ஜனதா கட்சி தங்களின் சுயநலத்திற்காக பயன்படுத்துகிறது என காங்கிரசின் குற்றச்சாட்டிற்கு பதில் அளிக்கையில் காங்கிரஸ் கட்சி தான் அனைத்து குறைகள் எழுதும் ஈடுபட்டு வருகிறது. ஆகையால் அவர்கள் அதனை சொல்ல அருகதை இல்லை” என தெரிவித்தார்.