மேடையிலேயே அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த வானதி! ‘பாஜகவுக்கு தனி நபர்கள் முக்கியமல்ல!’

 
va

அதிமுக -பாஜக இடையே மோதல் உச்சகட்டத்திற்கு சென்று கொண்டிருக்கும் போது இரு கட்சியில் இருந்தும் சீனியர்கள் சிலர் சமாதான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார்கள்.  அதில் பாஜக தரப்பில் இருப்பவர்களில் முக்கியமானவர் வானதி சீனிவாசன்.  தலைமை அதிமுகவுடன் தான் கூட்டணி அமைக்க வேண்டும் என்று  சொல்லுவதை கேட்காமல் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால்  தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வேன் என்று அண்ணாமலை சொல்வதற்கு பாஜகவிற்கு தனி நபர்கள் முக்கியமல்ல; தலைமை சொல்வதை கேட்டு நடக்க வேண்டும் என்று மேடையிலேயே பதிலடி கொடுத்திருக்கிறார் வானதி சீனிவாசன்.

bb

அதிமுக பாஜக மோதலால் இரு கட்சியிலும் இருக்கும்  தொண்டர்களுக்கு வெறுப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது.  பகைமை எண்ணம் வேரோடி விட்டது.  நாளைக்கு தேர்தல் நேரத்தில் இரு கட்சித் தலைமையும் சமாதானம் ஆகிவிட்டாலும் கூட,  அடிபட்ட தொண்டர்கள் மனதில் காயம் அப்படியே தான் இருக்கும் . அது தேர்தல் முடிவுகளை பாதிக்கும் என்று இரு கட்சிக்கும் இடையே உள்ள நடுநிலையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 பாஜக தலைமையும் அதிமுகவுடன் கூட்டணி வைப்பது தான் நல்லது என்று நினைக்கிறது.  வரும் நாடாளுமன்றத் தேர்தலில்  15 இடங்கள் அதிமுக கூட்டணிக்கு கிடைக்கும் என்ற நிலை இருக்கிறது .  தமிழகத்தில் 15 எம்பிக்கள் கிடைப்பது பாஜகவுக்கு பெரிய பக்கபலமாக இருக்கும் என்று பாஜக தலைமை நினைக்கிறது .ஆனால் அண்ணாமலையோ இதைப் பற்றியும் யோசிக்காமல் தடாலடியாக அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் தலைவர் பொறுப்பை விட்டு விலகி விடுவேன் என்று சொல்லி வருகிறார்.

 பாஜக தலைமையை பொறுத்த வரைக்கும் பிரதமர் வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்று தான் நினைக்கும்.  அதற்கு ஒத்துழைக்காமல் பிடிவாதம் பிடித்தால் அண்ணாமலையை தூக்கி கடாசி விட்டு வேறொரு தலைவரை நியமித்து கூட்டணி ஒப்பந்தம் செய்து விடுவார்கள். 

 இந்த நிலையில் பாஜகவுக்கு தனிப்பட்ட நபர்கள் முக்கியமல்ல தேசியமும் நாடும் தான் முக்கியம்.  தேசம் நன்றாக இருப்பதற்காக தேசிய தலைமை என்ன நிலைப்பாடு எடுத்து செயல்பட வலியுறுத்துகிறதோ தலைவர்களும் தொண்டர்களும் முழு மனதோடு அதை ஏற்று செயல்பட வேண்டும் என்று மேடையிலேயே அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன்.