கட்சி பலமாக இருக்கவேண்டும் என்பதே தொண்டர்களின் கருத்து- வைத்திலிங்கம்

 
vaithilingam admk

அதிமுகவில் ஒற்றைத்தலைமை கோரிக்கை எழுந்துள்ள நிலையில், கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தின் வீட்டில் 2 வது நாளாக அவரது ஆதரவாளர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

அதிமுக ஆட்சியில் எந்தக் குழப்பமும் இல்லை; மீண்டும் ஆட்சி அமைப்போம்: ஓபிஎஸ்  உடனான சந்திப்புக்குப் பிறகு வைத்திலிங்கம் பேட்டி | Vaithilingam on ...

இன்று, துணை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான  எம்.எல்.ஏ வைத்திலிங்கம், எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன், ராஜ்யசபா எம்.பி. தர்மர்,  அதிமுக தென்சென்னை மாவட்ட செயலாளர் அசோக்,  தேனி மாவட்ட செயலாளர் சையது கான், நெல்லை மாநகர மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, விருதுநகர் கிழக்கு  மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் ஓ.பி.எஸ் இல்லத்தில் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

அதன்பிறகு வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம், “தொண்டர்கள் கட்சி பலமாக இருக்கவே விரும்புகின்றனர். இன்றைய கூட்டத்தில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களுக்கு அழைப்பு கொடுப்பதைப் பற்றி பேச பட்டது. இன்று காலை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஒற்றை தலைமை வேண்டும் என்று பேசப்பட்டது. அதில் ஒருசிலர் இபிஎஸ் வேண்டுமென்றும் ஒரு சிலர் ஓபிஎஸ் வேண்டும் என்றும் இரண்டு பேருக்குமே ஆதரவான கருத்துகளை தெரிவித்தனர். இருப்பினும் இப்போது அதை பற்றி இங்கு பேசவில்லை. பொதுக்குழுவில் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானங்கள் குறித்து பேச பட்டது” என தெரிவித்தார்.