“ராஜ்யசபா சீட்டை விட்டுக்கொடுக்கிறேன்... யாரும் திமுகவை திட்டாதீர்கள்”- வைகோ

 
vaiko mk stalin vaiko mk stalin

ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் என் பெயர் இல்லாவிட்டால் அதற்காக யாரும் திமுகவை திட்டி சமூக வலைதளங்களில் எழுத கூடாது என மதிமுக பொதுச்செயலாளர் பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

Image

மதிமுக தொழிற்சங்க பொதுக்குழு கூட்டத்தில் உரையாற்றிய அக்கட்சி பொதுச்செயலாளர் வைகோ, “ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் என் பெயர் இல்லாவிட்டால் அதற்காக யாரும் திமுகவை திட்டி சமூக வலைதளங்களில் எழுத கூடாது. ராஜ்யசபா சீட்டை விட்டுக்கொடுத்து, 2026 சட்டமன்ற தேர்தலில் அதிக சீட்டுகளை பெற திட்டமிட்டுள்ளோம். 2026 சட்டமன்ற தேர்தலில் குறைந்தபட்சம் 10 எம்.எல்.ஏக்களை மதிமுக இருந்து சட்டமன்றத்துக்கு அனுப்ப இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆகவே ராஜ்யசபா பட்டியலில் என் பெயர் வராமல் கூட போகலாம்” எனக் கூறினார்.