துரைசாமி பொய் சொல்கிறார் - வைகோ குற்றச்சாட்டு

 
பேனர் அகற்றுவதில் சிக்கல்… ஊழியர்களை தாக்கிய மதிமுகவினர்… வருத்தம் தெரிவித்த வைகோ!

திமுகவுடன் கூட்டணி வைத்தது துரைசாமிக்கு பிடிக்கவில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 

மதிமுகவில் இருந்து திருப்பூர் துரைசாமி விலகிய நிலையில் அக்கட்சியின் நிறுவனர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திருப்பூர் துரைசாமி விலகியதற்கான காரணங்கள் எனக்கு தெரியாது. அதேநேரம் துரைசாமி வைக்கும் குற்றச்சாட்டுகள் எதுவும் உண்மையல்ல. திமுகவுடன் கூட்டணி அமைப்பதை துரைசாமி விரும்பவில்லை. திமுகவுடன் கூட்டணி அமைக்கக்கூடாது என திருப்பூர் துரைசாமி கூறினார். அன்று திமுகவை எதிர்த்த துரைசாமி இன்று திமுகவுடன் மதிமுகவை இணைக்க கூறுகிறார். தேர்தலின்போது திமுகவின் வெற்றிக்கு எதிராக திருப்பூர் துரைசாமி செயல்பட்டார். 

துரைசாமி விலகியதற்கான நோக்கம் பற்றி தெரியாது. திமுகவோடு கூட்டு சேரவே கூடாது என்று சொன்ன அவர், இப்போது இணைய சொல்வதை எதிர்க்கிறார்கள் என்று வெளியே செல்வது வேடிக்கையாக உள்ளது. மதிமுகவை திமுக உடன் இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை. அரசியலில் மனிதாபிமானத்தோடு கழக தொண்டர்களை சந்தித்தும் உதவியும் வருகிறார் துரைவைகோ. துரை வைகோ அரசியலுக்கு வரவேண்டும் என பலர் சொன்னதை நான் எதிர்த்தேன்.அவர் அரசியலுக்கு வருவதில் எனக்கு விருப்பம் இல்லை.  ரகசிய வாக்கெடுப்பில் பங்கெடுத்த 106 பேரில், 104 பேர் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்றும், 2 பேர் வேண்டாம் என்றும் வாக்களித்தார்கள். அதனால் தான் அவர் அரசியலுக்கே வந்தார். என்னோடு துரைசாமி இணைந்து பயணித்ததற்கு நன்றி. ஆனால் அவர் கூறும் குற்றச்சாட்டுகள் எதுவும் உண்மை இல்லை” என்றார்.