வைகோவுக்கு ராஜ்யசபா சீட் இல்லை... கூட்டணியிலிருந்து மதிமுக விலகலா?
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கு மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

மாநிலங்களவைத் தேர்தல் வரும் ஜூன் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் திமுக சார்பில் ராஜ்யசபா வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் நடிகரும் மக்கள் நீதி மைய கட்சித் தலைவருமான கமல்ஹாசன். திமுக மற்றும் அதன் கூட்டணி கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் எம்பி ஆகிறார். திமுக அதிமுக கட்சிகளுக்கு மாற்று என கட்சி தொடங்கிய கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினர் என்ற அளவில் நிறுத்தி இருக்கிறார்.
மூத்த வழக்கறிஞர் வில்சன் அவர்களுக்கு மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக போட்டியிட திமுக வாய்ப்பு வழங்கியுள்ளது கடுமையான நீதிமன்ற பணிகள் இருந்தாலும் கூட நாடாளுமன்ற செயல்பாடுகளில் கொஞ்சமும் சலிப்பில்லாமல் செயல்படுபவர் வில்சன். தனிநபர் மசோதா கொண்டு வருவது முக்கிய மசோதாக்களில் பேசுவது, விடுப்பு இல்லாமல் அவை நடவடிக்கைகளில் கலந்து கொள்வது பல துறைகள் சார்ந்த கேள்விகளை எழுப்புவது கருத்தரங்குகளை நடத்துவது என மிக தீவிரமாக செயல்பட்டவருக்கு அவரது உழைப்பிற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கு மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. கடந்த சில மாதங்களாக நாடாளுமன்ற அலுவல்களில் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்று வந்த அவருக்கு இம்முறை வாய்ப்பு இல்லை. வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றாலும் திமுக கூட்டணியில் தொடர்வதாக துரை வைகோ அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்திற்கு உள்ளே மட்டுமல்ல எப்போதும் மக்களின் குரலாக வைகோ ஒலிப்பார் என்றும் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ கூறியுள்ளார்.


