மாநிலத்தில் சில்வர் லைன் ரயில் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்.. கேரள காங்கிரஸ் உறுதி

 
 தனக்பூர்-பாகேஷ்வர் ரயில் பாதை

கேரளாவில் சில்வர் லைன் ரயில் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று அம்மாநில காங்கிரஸ் தெரிவித்துள்ளது.


கேரள மாநிலத்தில் தெற்கே திருவனந்தபுரத்தையும், வடக்கே காசர்கோடு வரை இணைக்கும்  மித வேக ரயில் பாதை அமைக்கும் திட்டமான கே-ரயில் சில்வர் லைன் திட்டத்தை முதல்வர் பினராயி விஜயன்  தலைமையிலான இடதுசாரி அரசு முன்வைத்துள்ளது.  இந்த திட்டத்தின்படி, திருவனந்தபுரம்-காசர் கோடு இடையே  ரூ.63,941 கோடி செலவில் 11 மாவட்டங்களை உள்ளடக்கும்  532 கி.மீட்டர் தொலைவுக்கு  ரயில் பாதை அமைக்கப்படும். 

காங்கிரஸ்

 முதல்வர் பினராயி விஜயன்  தலைமையிலான இடதுசாரி அரசின் மிகப்பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. அதேசமயம் சில்வர் லைன் திட்டத்தை எதிர்த்து அங்கு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக காங்கிரஸ் கட்சி இந்த திட்டத்தை எதிர்தது வருகிறது. கேரள சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த திட்டம் குறித்து மாநில அரசு விவாதம் கூட நடத்தவில்லை. அதை அனுமதிக்க மாட்டோம். 

வி.டி.சதீசன்

அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்துக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு கடுமையான நிலைப்பாட்டை எடுத்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  பொதுச்செயலாளரும் கூட, இது ஒரு வசதி படைத்தவர்களுக்கான திட்டம் என்றும் ஏழைகளுக்கு உதவாது என்றும் கூறினார். மெகா திட்டத்தில் அரசு  அரசு கவனம் செலுத்துகிறது என்றால், மத்திய அரசின் புல்லட் ரயில் திட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.