இளைஞர்களை ஊக்குவிப்போம் என கூறியது ஆனால் 75 வயது முதியவருக்கு டிக்கெட்... பா.ஜ.க.வை தாக்கிய எம்.எல்.ஏ.

 
பா.ஜ.க.

இளைஞர்களை ஊக்குவிப்போம் என்று பா.ஜ.க. கூறியது, ஆனால் 75 வயது முதியவருக்கு டிக்கெட் கொடுத்துள்ளது அந்த கட்சியிலிருந்து விலகி சமாஜ்வாடியில் இணைந்த எம்.எல்.ஏ. ஜிதேந்திர வர்மா குற்றம் சாட்டினார்.

உத்தர பிரதேசத்தில் இதுவரை 3 அமைச்சர்கள் உள்பட சுமார் ஒரு டஜன் எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இருந்து விலகி உள்ளனர். அதில் ஒருவர்தான் உத்தர பிரதேச எம்.எல்.ஏ. ஜிதேந்திர வர்மா. இவர் நேற்று பா.ஜ.க.வின் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததோடு, சமாஜ்வாடி கட்சியில் இணைந்தார். சமாஜ்வாடி கட்சியில் இணைந்த பிறகு ஜிதேந்திர வர்மா செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: 

ஜிதேந்திர வர்மா

நான் பா.ஜ.க.வுக்காக பணியாற்றினேன் ஆனால் அதையும் மீறி எனக்கு டிக்கெட் (தேர்தலில் போட்டியிட வாய்ப்பு) மறுக்கப்பட்டது. இளைஞர்களை ஊக்குவிப்போம் என்று பா.ஜ.க. கூறியது. ஆனால் 75 வயது முதியவருக்கு டிக்கெட் கொடுத்துள்ளது. எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் சமாஜ்வாடி வெற்றி பெற்று மாநிலத்தில் ஆட்சி அமைக்கும். மக்கள் நலனுக்காக பாடுபடுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ரவுடி விகாஸ் துபே மனைவி எங்க கட்சி உறுப்பினரே கிடையாது.. அலறும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி..

உத்தர பிரதேசத்தில் 403 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பிப்ரவரி 10ம் தேதி தொடங்கி மொத்தம் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தல் இன்னும் சில வாரங்களே உள்ளதால் உத்தர பிரதேசத்தில் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.