பா.ஜ.க.வுக்கு எதிராக தேர்தலில் தனித்து போட்டியிடும் நிலையில் எதிர்க்கட்சிகள் எதுவும் இல்லை.. உ.பி. துணை முதல்வர்

 
பா.ஜ.க.

எதிர்வரும் உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக தனித்து  போட்டியிடும் நிலையில் அரசியல் கட்சிகள் (எதிர்க்கட்சிகள்)  எதுவும் இல்லை என்று அம்மாநில துணை முதல்வர் தினேஷ் சர்மா தெரிவித்தார்.

கடந்த 2005ம் ஆண்டு பா.ஜ.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ. (முகமதாபாத் சட்டப்பேரவை தொகுதி)கிருஷ்ணானந்த் ராய்  மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது நினைவு தினத்தை முன்னிட்டு காஜிபூரில் பா.ஜ.க. சார்பில் நிகழ்ச்சி ஒன்று நேற்று முன்தினம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், உத்தர பிரதேச துணை முதல்வருமான தினேஷ் சர்மா கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியல் தினேஷ் சர்மா கூறியதாவது:

தினேஷ் சர்மா

பா.ஜ.க.வுக்கு எதிராக தேர்தல்களில் தனித்து  போட்டியிடும் நிலையில் அரசியல் கட்சிகள் (எதிர்க்கட்சிகள்)  எதுவும் இல்லை. எனவே எதிர்க்கட்சிகள் பல்வேறு கூட்டணிகள் வைக்கின்றன. எதிர்க்கட்சிகள் பொய்யான வாக்குறுதிகள் அளிக்கின்றன. ஜனநாயகத்தின் சிறந்த பா.ஜ.க.வுக்கு வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும். முந்தைய அரசாங்கங்கள் காஜிபூருக்கு குற்றங்களையும், குற்றவாளிகளையும் மட்டுமே வழங்கின.

ரவுடி விகாஸ் துபே மனைவி எங்க கட்சி உறுப்பினரே கிடையாது.. அலறும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி..

இவர்களது (முந்தைய அரசாங்கங்கள்) ஆட்சியில் பார்ப்பனர்களின் புண்ணிய பூமி வளர்ச்சி இல்லாமல் இருந்தது. தற்போதைய அரசாங்கம் (யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசு)  கல்வி, சுகாதாரம், மருத்துவக் கல்லூரி மற்றும் காஜிபூருக்கு நான்கு வழிச் சாலை வசதிகளை வழங்கியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கடந்த சில தினங்களுக்கு முன் அப்னா தளம் (கே) கட்சியுடன் கூட்டணியை உறுதி செய்தது. இந்த நேரத்தில் தினேஷ் சர்மாவின் கருத்து வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.