ஹரிதா கமிட்டியை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கலைத்தது குறித்து ராகுல் காந்தி நிலைப்பாடு என்ன?.. பா.ஜ.க. கேள்வி

ஹரிதா கமிட்டியை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கலைத்தது குறித்து ராகுல் காந்தி நிலைப்பாடு என்ன?.. பா.ஜ.க. கேள்வி

ஹரிதா கமிட்டியை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கலைத்த விவகாரத்தில் ராகுல் காந்தியின் நிலைப்பாடு என்ன என்று பா.ஜ.க.வை சேர்ந்த மத்திய அமைச்சர் வி.முரளீதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

முஸ்லிம் மாணவர்களின் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஹரிதா கமிட்டி. ஹரிதா தலைவர்கள் முஸ்லிம் மாணவர்கள் கூட்டமைப்பின் மாநில தலைவர் பி.கே. நவாஸ் மற்றும் மணப்புரம் மாவட்ட பொதுச்செயலாளர் பி.வி. அப்துல் வஹப் ஆகியோருக்கு எதிராக பெண்கள் ஆணையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரை திரும்ப பெறும்படி ஹரிதா தலைவர்களிடம் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கூறியது. ஆனால் அவர்கள் திரும்ப பெற மறுத்து விட்டனர். இந்நிலையில், கட்சியின் ஒழுங்கு விதிமுறைகளை அடிக்கடி மீறியதாக கூறி ஹரிதாக கமிட்டியை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கலைத்தது.

ஹரிதா கமிட்டியை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கலைத்தது குறித்து ராகுல் காந்தி நிலைப்பாடு என்ன?.. பா.ஜ.க. கேள்வி
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்

ஹரிதா கமிட்டி கலைக்கப்பட்டது குறித்து ராகுல் காந்தியின் நிலைப்பாடு என்ன என்று பா.ஜ.க. கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக மத்திய இணையமைச்சர் முரளீதரன் கூறியதாவது: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐ.யு.எம்.எல்.) பெண்களுக்கு எதிரானது. நாங்கள் முத்தலாக் எதிரான சட்டத்தை கொண்டு வந்தபோது அதை அவர்கள் எதிர்த்தார்கள். அந்த கட்சியை சேர்ந்த பெண்கள் குரல் கொடுத்ததை கேட்கவில்லை, அவர்களின் குறைகள் தீர்க்கப்படவில்லை. அவர்களின் (பெண்கள்) குரல்கள் அடைக்கப்பட்டன. ஐ.யு.எம்.எல். ஆதரவால் வென்றவர் ராகுல் காந்தி. ஹரிதா கமிட்டி கலைக்கப்பட்டது குறித்து மவுனமாக இருப்பது ஏன்?

ஹரிதா கமிட்டியை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கலைத்தது குறித்து ராகுல் காந்தி நிலைப்பாடு என்ன?.. பா.ஜ.க. கேள்வி
வி.முரளீதரன்

காங்கிரஸ் பெண்களுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுக்கும் என்று ஒரு இமேஜை உருவாக்கியுள்ளது. ஆனால் அவர்களது கூட்டணி கட்சி முஸ்லிம் மாணவர்கள் பிரிவின் பெண்கள் பிரிவான ஹரிதா கமிட்டியை கலைத்தது. ஏனெனில் அவர்கள் (ஹரிதா கமிட்டி) பெண்கள் பாகுபாடு மற்றும் துன்புறுத்தலுக்கு எதிராக பேசினர். ஆகையால் இந்த காங்கிரஸ் தலைவர்கள் இப்போது ஐ.யு.எம்.எல். கட்சியின் பெண்களுக்கு எதிரான அணுகுமுறை குறித்து என்ன சொல்லப்போகிறார்கள் என்பதை அறிய விரும்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.