சீன கடிதம் விவகாரம்.. வெளியுறவு விவகாரங்கள் துறை அமைச்சர் பதில் அளிப்பார்.. ராம்தாஸ் அதவாலே

 
கபில் சிபல் மற்றும் குலாம் நபி ஆசாத் பா.ஜ.க.வில் சேர வேண்டும்… பா.ஜ.க.வுக்கு ஆள் பிடிக்கும் ராம்தாஸ் அத்வாலே

திபெத் பார்லிமெண்ட் நடத்திய இரவு விருந்தில் கலந்து கொண்ட இந்திய எம்.பி.களுக்கு சீனா கடிதம் எழுதிய விவகாரம் தொடர்பாக வெளியுறவு விவகாரங்கள் துறை அமைச்சர் பதில் அளிப்பார் என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே தெரிவித்தார். 

திபெத்திய மக்களின் நாடு கடந்த அரசு மற்றும் பார்லிமெண்ட் கடந்த வாரம் நடத்திய நிகழ்ச்சி மற்றும் இரவு விருந்தில், மத்திய அமைச்சர் ராஜீவ், பி.ஜே.டி. எம்.பி. சுஜீத் குமார், பா.ஜ.க.வின் மேனகா காந்தி, காங்கிரஸ் எம்.பி.க்கள் மணிஷ் திவாரி,  ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். திபெத்திய பார்லிமெண்ட் நடத்திய இரவு விருந்தில் இந்திய எம்.பி.க்கள் பங்கேற்றதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் இது தொடர்பாக இந்திய எம்.பி.க்களுக்கு சீனா கடிதம் எழுதியது. 

ஜெய்ராம் ரமேஷ்

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே செய்தியாளர்களிடம் கூறியதாவது: சீனாவுக்கு சில ஆட்சேபனைகள் இருக்கலாம். ஆனால் திபெத் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். தலாய் லாமா 1949ல் இந்தியாவுக்கு வந்தார். அவருக்கு நீதி கிடைக்க வேண்டும். திபெத் மக்கள் பாதிக்கப்படக்கூடாது. சீனாவின் கடிதத்துக்கு நமது வெளியுறவு விவகாரங்கள் துறை அமைச்சர் பதிலளிப்பார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தலாய் லாமா

1959ல் ஏற்பட்ட திபெத்திய கிளர்ச்சி, திபெத்திய மக்களுக்கும், சீனப் படைகளுக்கும் இடையே வன்முறை மோதல்களை கண்டது. சீன ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சி தோல்வியடைந்தால், 14வது தலாய் லாமா அண்டை நாடான நம் நாட்டுக்கு தப்பி வந்தார். அப்போது முதல் இமாசலில் உள்ள தர்மசாலாவில் வசித்து வருகிறார். தலாய் லாமா நம் நாட்டில் ஒரு நாடு கடத்தப்பட்ட பார்லிமெண்ட் நிறுவினார். இங்கு இருந்தபடியே திபெத் அரசை அவர் நிர்வகித்து வருகிறார்.