தவறு செய்வது மனித இயல்பு ஆனால் மீண்டும் மீண்டும் அதை நியாயப்படுத்துவது முட்டாள்தனம்.. பிரகலாத் ஜோஷி

 
பிரகலாத் ஜோஷி

தவறு செய்வது மனித இயல்பு ஆனால் மீண்டும் மீண்டும் அதை நியாயப்படுத்துவது முட்டாள்தனம் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி பதிலடி கொடுத்தார்.

மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நேற்று டிவிட்டரில் கடந்த மழைக்கால கூட்டத்தொடர் தொடர்பான வீடியோக்களை பதிவேற்றம் செய்து, காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் மற்றும் அவரது சகாக்கள் குண்டர் சண்டையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டினார். மேலும், ராகுல் காந்தியையும் விமர்சனம் செய்து இருந்தார். பிரகலாத் ஜோஷி தொடர்ச்சியான டிவிட்டுகளில், மக்கள் பிரதிநிதிகள் என்ற முறையில், தலைவருக்கு மதிப்பளித்து, தங்கள் பதவிக்கு தகுதியான முறையில் நடந்து கொள்வது நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடமையாகும். 

ஜெய்ராம் ரமேஷ்

இருப்பினும் ஜெய்ராம் ரமேஷ், உங்கள் சகாகள் விவாதத்தில் இளையூறுகளை தேர்ந்தெடுத்தனர். முழு நாடும் அவர்களின் குண்டர்த்தனத்தை கண்டது துரதிர்ஷ்டவசமானது. தவறு செய்வது மனித இயல்பு ஆனால் மீண்டும் மீண்டும் அதை நியாயப்படுத்துவது முட்டாள்தனம். உங்கள் சகாக்கள் மன்னிப்பு கேட்டால் இடைநீக்கத்தை திரும்ப பெற நாங்கள் (அரசு) எப்போதும் தயாராக இருந்தோம். ஆனால் அவர்கள் நியாயப்படுத்த மட்டுமே செய்கிறார்கள். 

ராகுல் காந்தி

ராகுல் காந்தியை மகிழ்விக்கும்போது உங்கள் வழியை இழக்கக் கூடாது. மரியாதை கட்டளையிடப்படுகிறது மற்றும் கோரவில்லை என்று அவரிடம் சொல்லுங்கள் என்று பதிவு செய்து இருந்தார். கடந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின்போது மாநிலங்களவையில் ஒழுங்கீனமான நடந்த கொண்ட எம்.பி.க்கள் ரிபுன் போரா, பிரியங்கா சதுர்வேதி, பினோய் விஸ்வம் உள்பட மொத்தம் 12 எம்.பி.க்கள்  கடந்த குளிர்கால கூட்டத்தொடரின் எஞ்சிய அமர்வு முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் மன்னிப்பு கேட்டால் இடைநீக்கம் ரத்து செய்யப்படும் என்று அரசு தரப்பு தெரிவித்தது. ஆனால் அவர்கள் மன்னிப்பு கேட்கவில்லை இதனால் 12  எம்.பி.க்களும் கடந்த குளிர்கால தொடரில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.