“செருப்பு தைக்கும் குடும்பத்தை சேர்ந்த என்னை அமைச்சராக்கி அழகு பார்த்தவர் மோடி” – உணர்ச்சி பொங்க பேசிய எல்.முருகன்!

“செருப்பு தைக்கும் குடும்பத்தை சேர்ந்த என்னை அமைச்சராக்கி அழகு பார்த்தவர் மோடி” – உணர்ச்சி பொங்க பேசிய எல்.முருகன்!

மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்குச் சென்றடையச் செய்யும் நோக்கில் ‘மக்கள் ஆசி யாத்திரை’ எனும் சுற்றுப் பயணத்தை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கோவையில் இன்று தொடங்கிவைத்தார். அப்போது வாஜ்பாயின் நினைவுநாளான இன்று அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதற்குப் பின் நிகழ்ச்சியில் பேசிய அவர், “அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த என்னை மத்திய இணை அமைச்சராக்கி அழகு பார்த்தவர் பிரதமர் நரேந்திர மோடி. செருப்பு தைக்கும் தொழிலாளி குடும்பத்தைச் சேர்ந்த என்னை மாநில தலைவராக்கியது பாஜக.

“செருப்பு தைக்கும் குடும்பத்தை சேர்ந்த என்னை அமைச்சராக்கி அழகு பார்த்தவர் மோடி” – உணர்ச்சி பொங்க பேசிய எல்.முருகன்!

தமிழ்நாட்டில் வேறு எந்தக் கட்சிகளும் இதனைச் செய்ய முன்வராது. சமூகநீதியை முன்னிறுத்த வேண்டிய எதிர்க்கட்சியினர் சிலர் என்னை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்துவைக்க கூடாது என தடுத்தனர். இதனால் பிரதமர் மோடியால் அமைச்சராக அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பை நான் இழந்தேன். மத்திய அமைச்சரவையில் தாழ்த்தப்பட்டவர்கள் 12 பேர் பழங்குடியினரில் 8 பேர் உள்ளனர். ஓபிசி பிரிவினர், பெண்களும் அமைச்சராக்க்கப்பட்டிருக்கிறார்கள். சமூகநீதியைப் போற்றுபவராக பிரதமர் மோடி இருக்கிறார்.

“செருப்பு தைக்கும் குடும்பத்தை சேர்ந்த என்னை அமைச்சராக்கி அழகு பார்த்தவர் மோடி” – உணர்ச்சி பொங்க பேசிய எல்.முருகன்!

இவர்களையெல்லாம் அறிமுகம் செய்துவைக்க பிரதமர் மோடி தயாராக இருந்தார். ஆனால் அன்றைக்கு காங்கிரஸ், கம்யுனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் குழப்பத்தை ஏற்படுத்தி அதைச் செய்யாமல் தடுத்துவிட்டனர். அது எனக்கு கோபத்தையும் ஆதங்கத்தையும் உண்டாக்கியுள்ளது. 75 ஆண்டுகளுக்குப் பிறகு சாதாரண ஏழைக் குடும்பத்திலிருந்து அமைச்சராகியிருக்கிறோம். ஆனால் அது பிடிக்காமல் வேண்டுமென்றே கங்கணம் கட்டிக்கொண்டு அறிமுக நிகழ்வை நடத்த விடவில்லை” என்றார்.