அகிலேஷ் யாதவ் பயன்படுத்தும் வார்த்தை அவரது வளர்ப்பையும், மனநிலையையும் காட்டுகிறது... அனுராக் தாக்கூர்

 
அனுராக் தாக்கூர்

பிரதமர் நரேந்திர மோடி இரு நாள் பயணமாக கடந்த செவ்வாய்க்கிழமையன்று தனது சொந்த தொகுதியான வாராணசிக்கு சென்றார். அங்கு காசி விஸ்வநாதர் கோயில் வளாக மேம்பாட்டு திட்டத்தின் முதல் தொகுதி உள்பட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் வாராணசி பயணத்தை அகிலேஷ் யாதவ் நாகரீகமற்ற முறையில் விமர்சனம் செய்தார்.

மோடி

மோடியின் வாராணசி சுற்றுப்பயணம் குறித்து சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில்,  வாராணசி காசி விஸ்வநாதருக்கு நிகழ்ச்சிகள் ஒரு மாத காலம் இருப்பது நல்லது. அவர்கள் ( பிரதமர் மோடி மற்றும் பிற பா.ஜ.க. தலைவர்கள்) 1,2 அல்லது 3 மாதங்கள் அங்கேயே இருக்க வேண்டும். மக்களும் தங்கள் கடைசி தருணங்களை பனாரஸில் கழிக்க வேண்டும் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அகிலேஷ் யாதவின் பேச்சுக்கு பா.ஜ.க. பதிலடி கொடுத்துள்ளது.

அகிலேஷ் யாதவ்

மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறுகையில், அகிலேஷ் யாதவ் பயன்படுத்தும் வார்த்தை அவரது வளர்ப்பையும், மனநிலையையும் காட்டுகிறது. நம் பெரியோர்களை பற்றி இப்படியா பேசுவது, சமாஜ்வாடி கட்சியில் நிலவும் பதற்றத்தின் அளவையும் காட்டுகிறது. இது துரதிர்ஷ்டவசமானது  மற்றும் முன்னாள் முதல்வரிடமிருந்து எதிர்பார்க்கப்படவில்லை என்று தெரிவித்தார்.