சமாஜ்வாடி எம்.எல்.ஏ.க்கள் ஒன்னு சிறையில் அல்லது பெயிலில் இருக்கிறார்கள்... மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்

 
அனுராக் தாக்கூர்

சமாஜ்வாடி எம்.எல்.ஏ.க்கள் ஒன்னு சிறையில் அல்லது பெயிலில் இருக்கிறார்கள்  என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார். 

உத்தர பிரதேசத்தில் 403 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 10ம் தேதி தொடங்கி மொத்தம் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் இதுவரை 3 அமைச்சர்கள் உள்பட 10 எம்.எல்.ஏக்கள்  பாஜகவில் இருந்து விலகியிருக்கின்றனர். பா.ஜ.க.விலிருந்து விலகிய சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்தவர்களை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

பா.ஜ.க.

உத்தர பிரதேசம் லக்னோவில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: சமாஜ்வாடியில் சேருபவர்கள் கலவரம் செய்கிறார்கள். பா.ஜ.க.வில் சேருபவர்கள் கலவரக்காரர்களை பிடிக்கிறார்கள். சமாஜ்வாடி எம்.எல்.ஏ.க்கள் சிறையில் இருக்கிறார்களோ அல்லது ஜாமீனில் இருக்கிறார்களோ அதுதான் அவர்களின் அசல் ஆட்டம். தூய்மையான குணம் கொண்டவர்கள் பா.ஜ.க.வில் இணைவதும், ரத்தம் தோய்ந்த கைகளுடன் கலவரக்காரர்கள் பலர் சமாஜ்வாடியில் இணைவதும் தெளிவாக தெரிகிறது.

ரவுடி விகாஸ் துபே மனைவி எங்க கட்சி உறுப்பினரே கிடையாது.. அலறும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி..

எம்.எல்.ஏ. நஹித் ஹசனை (சமாஜ்வாடி கட்சியின் கைரான தொகுதி வேட்பாளர்) பார்த்தால் அவர் சமாஜ்வாடி கட்சியின் வேட்பாளர் நம்பர் 1. அவர் சிறையில் இருக்கிறார். இரண்டாவது எம்.எல்.ஏ. அப்துல்லா ஆசாம் ஜாமீனில் இருக்கிறார். சமாஜ்வாடி வேட்பாளர் பட்டியலை பார்த்தால், ஜெயில் இருப்பவர்களுடன் தொடங்கி பெயில் இருப்பவர்களுடன் முடிவடைகிறது. சிறை-ஜாமீன் விளையாட்டே சமாஜ்வாடி கட்சியின் உண்மையான விளையாட்டு. இவ்வாறு அவர் தெரிவித்தார்.