ஊழலை ஒழிப்போம் என்று நாங்கள் கூறியிருந்தோம், நாங்கள் அதை செய்தோம்.. அமித் ஷா

 
அமித் ஷா

உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமித் ஷா உரையாற்றுகையில், நாட்டிலிருந்து  ஊழலை ஒழிப்போம் என்று நாங்கள் கூறியிருந்தோம். நாங்கள் அதை செய்தோம் என்று  தெரிவித்தார்.

உத்தர பிரதேசம் ஹர்தோயில் உள்ள ஜி.ஐ.சி. மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் அமித் ஷா தனது பேச்சை பாரத் மாதா கி என்ற முழக்கத்துடன் தொடங்கினார். அமித் ஷா பேசியதாவது: சமாஜ்வாடி கட்சியின் ஏபிசிடி வேறு. அவர்களுக்கு ஏ என்றால் குற்றம் (அப்ராத்) மற்றும் தீவிரவாதம் (ஆடங்க்). பி என்றால் உறவுமுறை (பாய்-பதிஜாவத்), சி என்றால் ஊழல், டி என்றால் கலவரம் (டங்கா). 

ரவுடி விகாஸ் துபே மனைவி எங்க கட்சி உறுப்பினரே கிடையாது.. அலறும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி..

கான்பூரில் பிஸினஸ்மேன் பியூஷ் ஜெயினுக்கு சொந்தமான இடங்களில் ஏஜென்சிகள் நடத்திய ரெய்டில் பல நூறு கோடி ரூபாய் கைப்பற்றது. பியூஷ் ஜெயினுக்கும்  சமாஜ்வாடி கட்சிக்கும் தொடர்பு உள்ளது. உத்தர பிரதேசத்தில் அடுத்த சட்டப்பேரவை தேர்தலில் 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும். 

காங்கிரஸ்

நாட்டிலிருந்து ஊழலை ஒழிப்போம் என்று நாங்கள் கூறியிருந்தோம். நாங்கள் அதை செய்தோம். ஏழைகளின் வளர்ச்சிக்கு மோடி அரசு உறுதி பூண்டுள்ளது. மலைப்பாங்கான (ஜம்மு அண்டு காஷ்மீர்) யூனியன் பிரதேசத்தின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் எதிரானது. அதனால்தான் ஜம்மு அண்டு காஷ்மீரில் சிறப்பு சட்டப்பிரிவு 370 நீக்கியதை எதிர்க்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.