முதுகுளத்தூர் தொகுதியில் எம்எல்ஏவை சந்திக்க முடியல- தவெக நிர்வாகிகளிடம் புலம்பும் பொதுமக்கள்
முதுகுளத்தூர் தொகுதியில் பல்வேறு அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கைகளை பொதுமக்கள், தொகுதி எம்எல்ஏ ராஜகண்ணப்பனை நேரில் சந்தித்து மனு அளிப்பதை விட, தவெக (தமிழக வெற்றிக் கழகம்) கட்சி நிர்வாகிகளை அணுகி மனுக்களை வழங்கி வருவதாக கூறப்படுகிறது.
சாலை, குடிநீர், மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி, தவெக நிர்வாகிகளிடம் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை தெரிவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, பல கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நீடித்து வருவதாகவும், இந்த பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், "முதுகுளத்தூர் தொகுதி எம்எல்ஏ ராஜகண்ணப்பனை நேரில் சந்தித்து மனு அளிப்பது மிகவும் அரிதாக உள்ளது" என அப்பகுதியைச் சேர்ந்த சிலர் வேதனை தெரிவிப்பதாக கூறப்படுகிறது. ஆனால் தவெக நிர்வாகிகளை சுலபமாக அணுக முடிகிறது" என அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கருத்து தெரிவிப்பதாக கூறப்படுகிறது.

