உதயநிதி துணைமுதல்வர் ஆகணும் -பெருகும் அமைச்சர்கள் ஆதரவு

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்று முதலில் ஆரம்பித்து வைத்தார் அவரது நண்பரும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ். அதை அடுத்து திமுக அமைச்சர்கள் பலரும் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். தற்போது அமைச்சராகிவிட்டார். இதை அடுத்து உதயநிதி ஸ்டாலின் முதல்வர் துணை முதல்வராக வேண்டும் என்றும் ஆரம்பித்து வைத்தார் அன்பில் மகேஷ் . அதை தொடர்ந்து அமைச்சர்கள் ஒவ்வொருவராக உதயநிதி துணை முதல்வராக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
திமுக தலைவரும் முதல்வருமானவர் மு. க. ஸ்டாலின். அவரது மகன் உதயநிதி ஸ்டாலின். இவர் திமுகவில் இளைஞர் அணி செயலாளராக இருந்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் உதயநிதி எம்எல்ஏ ஆன பின்னர் அவர் அமைச்சராக வேண்டுமென்று அவரது நண்பரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் ஆரம்பித்து வைத்தார். அவர் ஆரம்பித்து வைத்ததை திமுகவின் மற்ற அமைச்சர்கள் பிடித்துக் கொண்டார்கள்.
உதயநிதி அமைச்சராக வேண்டும் அவருக்கு அமைச்சர் ஆவதற்கான எல்லா தகுதிகளும் இருக்கிறது அவர் ஒரே தொகுதியில் சேப்பாக்கத்தில் இருப்பதால் அந்த தொகுதி மக்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கிறது. இதுவே அவர் அமைச்சரானால் அந்தத் துறை மக்கள் அனைவருக்கும் நன்மைகள் கிடைக்கும் என்று பலரும் வலியுறுத்தி வந்தனர்.
அந்த நிலையில் தான் உதயநிதி ஸ்டாலின் தமிழர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரானார். அண்மையில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக வேண்டும் என்று அன்பில் மகேஷ் வெளிப்படையாக பேசியிருந்தார்.
இந்த கருத்து குறித்து அமைச்சர் செய்தித்துறைஅமைச்சர் சாமிநாதனும் அதையே வலியுறுத்தி இருந்தார். இதை அடுத்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் உதயநிதி துணை முதல்வராக வேண்டும் என்பதை வலியுறுத்தி இருந்தார். தற்போது உதயநிதி தமிழகத்தின் துணை முதல்வராக வேண்டும் என்று பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி வலியுறுத்தி இருக்கிறார்.
மதுரையில் திருப்பாலை பகுதியில் 19ஆம் தேதி முதல்வரின் வாழ்க்கை வரலாறு விளக்கம் புகைப்பட கண்காட்சி தொடங்க இருக்கிறது. இது குறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மூர்த்தி, சட்டமன்ற உறுப்பினராக மேயர், துணை முதல்வர் ,முதல்வர் என்று அவரின் வாழ்க்கை வரலாற்றை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்று சிவ சங்கர் உள்ளிட்ட அமைச்சர்கள் சொன்னது குறித்த கேள்விக்கு. ‘’உதயநிதி ஸ்டாலினின் திறமைக்கும் செயல்பாட்டுக்கும் ஏற்றார் போல் முதல்வர் முடிவு செய்து கொடுப்பார்’’ எனக் கூறியிருக்கிறார்.