தேர்தலின்போது நட்சத்திரம், நிலவு என்று சில தலைவர்கள் வாக்குறுதி கொடுப்பார்கள்.. பா.ஜ.க.வை தாக்கிய உத்தவ் தாக்கரே

 
உத்தவ் தாக்கரே உத்தவ் தாக்கரே

தேர்தலின்போது சாமானிய மக்களுக்கு நட்சத்திரங்கள், நிலவு என்று சில தலைவர்கள் வாக்குறுதி அளிப்பார்கள் என்று பா.ஜ.க. தலைவர்களை மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே மறைமுகமாக தாக்கினார்.


மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவ சேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மகா விகாஸ் அகாதி கூட்டணி அரசாங்கம் நடைபெற்று வருகிறது. முதல்வர் உத்தவ் தாக்கரே நேற்று மாநில அதிகாரிகளுடன் ஒரு சந்திப்பை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது: பல தலைவர்கள் தேர்தலின்போது, சமானிய மக்களுக்கு நட்சத்திரங்கள், நிலவு என்று வாக்குறுதி அளித்துவிட்டு பின்னர் அந்த வாக்குறுதிகளை மறந்து விடுகிறார்கள். 

பா.ஜ.க.

நட்சத்திரம், நிலவு என்று வாக்குறுதி நீங்கள் அளித்தீர்களே என்று மக்கள் கேட்டால், தேர்தல் நேரத்தில் இப்படியெல்லாம் சொல்வதாக இந்த தலைவர்கள் சொல்கிறார்கள். சிவ சேனா என்றும் அப்படியல்ல, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை ஒரு போதும் வழங்காது. சிவ சேனா காலம் முழுவதும் இப்படித்தான். காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸூடன் சிவ சேனா இணைந்து நகர்கிறது. யார் விடுபட்டுள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது. 

கொரோனா வைரஸ்

கோவிட் நிலைமை குறித்து கவலைப்பட வேண்டாம். நாங்கள் சூழ்நிலையை கையாளும் திறன் கொண்டுள்ளோம். உங்கள் ஆதரவை எங்களுடன் வைத்திருங்கள். வரும் நாட்களில் தேவைப்பட்டால், நான் கொரோனா வைரஸ் நிலைமை குறித்து பேசுவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். நம் நாட்டில் ஒமைக்ரான் வைரஸ் 23 மாநிலங்களில் பரவியுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 454 பேர் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.