உதயநிதி மரியாதை குறைவாக பேசவில்லை! முதல்வர் சொல்லியும் சமாதானம் ஆகாத பாஜக

 
a

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தவறாக ஒன்றும் பேசவில்லை.  அப்படி பேசி இருந்தால் நானே சொல்லி இருப்பேன் என்று முதல்வர் ஸ்டாலின் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கூட பாஜக சமாதானம் ஆகவில்லை .  அமைச்சர் உதயநிதியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 

 தமிழக சட்டப்பேரவையில் விளையாட்டு துறை சார்ந்த மாநில கோரிக்கையின் போது அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி பேசினார் . அவர் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஐபிஎல் போட்டியை காண டிக்கெட் ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

ny

 இதற்கு பதில் அளித்த, விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,   நான்கு வருடமாக ஐபிஎல் சென்னைகள் நடத்தவில்லை.  அப்படி இருக்கும்போது நீங்கள் எந்த போட்டிக்கு பாஸ் வாங்கி கொடுத்தீர்கள் என்று தெரியவில்லை .என்று கிண்டல் அடித்தவர்,  ஐபிஎல் போட்டியை நடத்துவது உங்களுடைய நெருங்கிய நண்பர் அமித்சாவின் மகன் தான் . 

நீங்கள் கேட்டால் டிக்கெட் கிடைக்கும்.  கேட்டு பாருங்கள்   நாங்கள் கேட்டால் தரமாட்டார்கள் . நீங்கள் கேட்டு வாங்கி கொடுத்தார் காசு கூட கொடுத்து வாங்கிக் கொள்கிறோம். நானாக சொந்த காசில் என் தொகுதியில் இருக்கும் விளையாட்டு வீரர்களுக்கு டிக்கெட் எடுத்து அழைத்து செல்கிறேன் என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.   அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த பேச்சு கேட்டு திமுக உறுப்பினர்கள் அனைவரும் சிரித்தனர்.

s

 அமைச்சரின் இந்த பேச்சுகு இன்று பாஜக சட்டமன்ற தலைவர் நயினார் நாகேந்திரன் எதிர்ப்பு தெரிவித்தார்.  உதயநிதி ஸ்டாலின் பேசிய அந்த பேச்சினை அவை  குறிப்பிலிருந்து  நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.  இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில் அளித்து பேசினார்.  அமைச்சர் மரியாதை குறைவாக எதுவும் சொல்லவில்லை.  அப்படி சொல்லி இருந்தால் நானே அதை குறிப்பில் இருந்து அதை நீக்க சொல்லி விடுவேன்.   திரு என்று சொல்லி தான் அமைச்சர் பேசி உள்ளார் என்ற விளக்கம் கொடுத்தார்.

ஆனால், பாஜகவினர் அந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.   வெளிநடப்பு செய்தனர்.