இரு கட்சி - இருவேறு காரணங்கள் : சென்னையில் பிரதமருக்கு கருப்புக்கொடி

 
ச்ப்

பிரதமர் நரேந்திர மோடிக்கு சென்னையில் கருப்பு கொடி காட்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முடிவு எடுத்துள்ளது . தவிர ,  தமிழக வாழ்வுரிமை கட்சியும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்ட முடிவெடுத்து இருக்கிறது . 

ம்

டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்ததை கண்டித்து நாளை சென்னை வரும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டுவது என்று தமிழக வாழ்வுரிமை கட்சி முடிவெடுத்து இருக்கிறது.  கட்சியின் தலைவர் வேல்முருகன் இதை அறிவித்திருக்கிறார். 

 இதே மாதிரி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியும் சென்னை வரும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்ட முடிவெடுத்திருக்கிறது.   காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்பி,  பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.   இதனால் நாடு முழுவதும் காங்கிரஸார் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.  

இந்த நிலையில் நாளை பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக நாளை சென்னை வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்ட அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.   சென்னையில் ஐந்து அடுப்பு பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டிருக்கிறது.   22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,  26 ஆயிரம் போலீசாராக பாதுகாப்பு பணியில் உயர்த்தி இருக்கிறது தமிழக காவல்துறை .

மெரினா கடற்கரை அருகே இருக்கும் விவேகானந்தர் இல்லத்தில் ராமகிருஷ்ண மடம் சார்பில் நடக்கும் விழாவில் பிரதமர் பங்கேற்ப இருப்பதால் அங்கு கண்காணிப்பு கேமராக்கள் தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளனர் போலீசார்.   இதனால் நாளை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் யாரும் வர வேண்டாம் என்று போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.