ஒவ்வொரு கட்சியிலும் முக்கிய புள்ளிகளை தட்டி தூக்கும் விஜய்! வெளியான புது நிர்வாகிகள் பட்டியல்

 
Vijay tvk

தமிழக வெற்றிக் கழகத்தில் மூன்றாம் கட்டமாக, 19 மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

தவெக தலைவர் விஜய் கடந்த ஜன-24 ஆம் தேதி முதல் கட்டமாக தமிழக வெற்றிக் கழகத்துக்கு 19 கட்சி மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்களை நியமித்து உத்தரவிட்டார். மேலும், சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கி 120 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளதாகவும், முதல்கட்டமாக 19 கட்சி மாவட்டங்களுக்கும் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தவெக தலைவர் விஜய் கூறியிருந்தார். பின்னர் இரண்டாம் கட்டமாக, 19 கட்சி மாவட்டங்களுக்கு  பொறுப்பாளர்களை நியமித்து உத்தரவிட்டார். இந்த நிலையில், மூன்றாம் கட்டமாக 19 கட்சி மாவட்டங்களுக்கு, கட்சி விதிகளின்படி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக தவெக தலைவர் விஜய் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “தமிழக வெற்றிக் கழகத்தில் மூன்றாம் கட்டமாக 19 கட்சி மாவட்டங்களுக்கு, கட்சி விதிகளின்படி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகிகளின் விவரங்களை அறிய https://www.dropbox.com/scl/fo/w3uvc48ljnlniyrqc5x0v/AO_PD9HpX94MhMeZjuNa7JM?rlkey=927a55eupvh0nocq4hi52dmvw&st=75kfq593&dl=0

என்ற லிங்க்கை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.புதிய நிர்வாகிகளுக்குக் கட்சித் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் கட்சியில் புதிதாக இணைந்தவர்களுக்கு முக்கிய பொறுப்புகளையும் வழங்கியுள்ளார்.


தமிழக வெற்றிக் கழகத்தின் அமைப்பு ரீதியிலானக் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையிலும், வலுவானத் தேர்தல் பிரசாரக் கட்டமைப்பை உருவாக்கும் வகையிலும் புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். 

புதிய பொறுப்பாளர்கள் பற்றிய விவரம்


1. திரு. ஆதவ் அர்ஜுனா B.A. (Political science) தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர்
2. திரு. CTR. நிர்மல் குமார் B.E., LLB.
துணைப் பொதுச்செயலாளர் (தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவு)
3. திரு. P.ஜெகதீஷ்
தலைமைக் கழக இணைப் பொருளாளர்
4. திரு. A.ராஜ்மோகன்
கழகக் கொள்கைப் பரப்புச் செயலாளர்
5.திரு. லயோலா மணி (எ) A.மணிகண்டன் M.A.
கழகக் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர்
6. பேராசிரியர் திரு. A.சம்பத்குமார் MBA., M.Phil., Ph.D. கழகக் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர்
7. திருமதி. J.கேத்ரின் பாண்டியன் M.A., B.Ed. கழகக் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர்
8. திரு. S.வீரவிக்னேஷ்வரன் B.E செய்தித் தொடர்பாளர்
9. திரு. S.ரமேஷ் B.E.
இணைச் செய்தித் தொடர்பாளர்
10. திரு. R.ஜெயபிரகாஷ் M.E., Ph.D.
தகவல் தொழில் நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர்
11. திரு. A.குருசரண் DCE.
தகவல் தொழில் நுட்பப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்
12. திரு. R.J.ரஞ்சன் குமார் B.E.
தகவல் தொழில் நுட்பப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்
13. திரு. திரு. R.குருமூர்த்தி BBA.
சமூக ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர்
14. திரு. R. ராம்குமார் BCA.
சமூக ஊடகப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்
15. திரு. P.வெங்கடேஷ் D.EEE., BE (EEE),
சமூக ஊடகப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்
16. திரு. R.நிரேஷ் குமார்
சமூக ஊடகப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்
17. திரு. S.அறிவானந்தம் M.A., M.Ed.
சமூக ஊடகப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்

விடுதலை சிறுத்தை கட்சி ஆதவ் அர்ஜனா மற்றும் அதிமுக ஐடி விங் செயலாளர் CTR நிர்மல் குமார் உள்ளிட்டோருக்கு தமிழக வெற்றி கழகத்தில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்சியிலும் முக்கிய பொறுப்பாளர்களை தட்டி தூக்குகிறார் விஜய். விஜயின் அடுத்த டார்கெட் யார் என ஒவ்வொரு கட்சியில் இருக்கும் தலைவர்களும் குழம்பிக் கொண்டிருக்கின்றனர்.