#BREAKING விஜய்யின் புதிய மூவ்! தனது வழிகாட்டுதலின் பேரில் இயங்கும் குழுவை அமைத்து அதிரடி

 
ன் ன்

கட்சியின் அன்றாட பணிகளை கவனிக்க 28 பேர் அடங்கிய நிர்வாக குழுவை அமைத்தார் தவெக தலைவர் விஜய்.

தவெக நிர்வாகக்குழு கூட்டம் சென்னை பனையூர் அலுவலகத்தில் நாளை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. நிர்வாகக் குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் தவறாமல் கலந்துகொள்ளுமாறு தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் கேட்டுக்கொண்டுள்ளார். விரைவில் சிறப்பு பொதுக்குழுவை கூட்ட திட்டமிட்டுள்ள நிலையில், நிர்வாக குழுவினருடன் விஜய் நாளை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். முன்னதாக தவெகவின் தினசரி செயல்பாடுகளை ஒருங்கிணைக்க 28 பேர் கொண்ட புதிய நிர்வாக குழு அமைக்கப்பட்டுள்ளது. தவெகவின் அன்றாட பணிகள், செயல்பாடுகளை ஒருங்கிணைக்க 28 பேர் அடங்கிய புது நிர்வாக குழுவை விஜய் அமைத்துள்ளார். இக்குழுவில் கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, அருண்ராஜ் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.


தனது வழிகாட்டுதலின் பேரில் இந்த குழு இயங்கும் எனவும் விஜய் அறிவித்துள்ளார். தனது உத்தரவு மற்றும் ஆலோசனைப்படியும், புஸ்ஸி ஆனந்தின் வழிகாட்டுதலின்படியும் செயல்படும் வகையில் வழக்கமாக குழுக்கள் அமைக்கப்பட்ட நிலையில், தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நிறுவனத் தலைவரான தனது நேரடி பார்வையின் கீழ் அனைவரையும் ஒரு குடையின் கீழ் விஜய் கொண்டு வந்துள்ளார். கரூர் துயர சம்பவத்திற்குப் பிறகு மீண்டும் தவெக ஆக்டிவ் மோடிற்கு வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.