தவெகவில் யார் யாருக்கு மாவட்ட செயலாளர்கள் பொறுப்பு? குவிந்த நிர்வாகிகளுக்கு காத்திருந்த ட்விஸ்ட்

 
ச்

சென்னை பனையூரில் இன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட பொறுப்பாளர் கூட்டத்தில் விண்ணப்பம் விநியோகிக்கப்பட்டது.

Image

சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. படப்பிடிப்புக்கு சென்றதால், தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விஜய் பங்கேற்கவில்லை. சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களை தேர்வு செய்வதற்கான விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட்டது. விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்த பின் நிர்வாகிகளை அழைத்த நேர்காணல் நடத்தி ஒரு மனதாக தேர்வு செய்ய திட்டமிடபட்டுள்ளது. அதுமட்டுமின்றி மாவட்ட செயலாளர்களை தலைவர் விஜய் என்றும் கூறப்படுகிறது.

Image

தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். விரைவில் மாவட்ட செயலாளர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.