‘விஜய் சொன்னால் கூட புஸ்ஸி ஆனந்த் கேட்பதில்லை’- தவெக ஆலோசகர் ஆடியோ லீக்
தமிழக வெற்றிக் கழக ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி பேசிய ஆடியோ லீக்காகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழக ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி பேசிய ஆடியோ லீக்காகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், விஜய் சொன்னால் கூட புஸ்ஸி ஆனந்த் கேட்பதில்லை, புஸ்ஸி ஆனந்த் கட்சியில் பெரிய ஆள் போல காட்டிக்கொள்வதாகவும் கூறியிருந்தார். அந்த ஆடியோ லீக்கானதால் நெருக்கடியில் புஸ்ஸி ஆனந்த் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நெருக்கடியை சமாளிக்க மாவட்ட பொறுப்பாளர்களிடம் விளக்கமளிக்க புஸ்ஸி ஆனந்த் முடிவு செய்துள்ளார். நாளை நடைபெறும் கூட்டத்தில் புஸ்ஸி ஆனந்த் தன்னிலை விளக்கம் அளிக்க திட்டமிட்டுள்ளார். மாவட்ட பொறுப்பாளர்களை சமாதானப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் புஸ்ஸி ஆனந்த் உள்ளார். ஆடியோவில் வெளியான தகவலை மாவட்ட பொறுப்பாளர் நம்பினால் சிக்கல் என ஆனந்த் நினைக்கிறார். ஆடியோவால் நிர்வாகிகளிடம் சோர்வு ஏற்பட்டுவிடும் என்பதால் விளக்கம் அளிக்க புஸ்ஸி ஆனந்த் முடிவு செய்துள்ளார்.