அதிமுகவை மீட்க ஓபிஎஸ் உடன் இணைந்து செயல்பட முடிவு- டிடிவி தினகரன்
சென்னை அடையாறில் நடைபெற்ற ஆலோசனைக்கு பின்னர், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஓபன்னீர்செல்வம் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய டிடிவி தினகரன், “உண்மையான அதிமுக தொண்டர்கள் கையில் கட்சியை ஒப்படைப்பதே நோக்கம்.அதிமுகவை மீட்க பன்னீசெல்வமும் நானும் ஒன்றிணைந்து செயல்பட உள்ளோம். அதிமுகவின் அனைத்து அடிப்படை தொண்டர்களும் இணையவேண்டும் என்பதே நோக்கம். எங்களுக்குள் எந்த பகையும் இல்லை சில காரணங்களுக்காக பிரிந்து இருந்தோம். இரண்டு இயக்கமும் ஒன்று சேர முடிவு செய்துள்ளோம். இது நீண்ட காலமாகவே யோசிக்கப்பட்டு வந்தது. கட்சியை காப்பாற்றவே இந்த முடிவை எடுத்துள்ளோம்.
பணமூட்டைகள் உள்ளவர்களிடம் தேவை கருதி சிலர் செல்கின்றனர். ஈபிஎஸ் துரோகி எனில் திமுக எங்களுக்கு பொது எதிரி. சிலர் சுயநலத்திற்காகவே ஈபிஎஸ் பக்கம் செல்கின்ரனர். எங்களால் யாரையும் பணம் கொடுத்து வாங்க முடியாது. ஓபிஎஸ்சை நம்பி இருட்டில் கூட கையை பிடித்தப்படி செல்லமுடியும். பழனிசாமியுடன் செல்ல முடியுமா? அதிமுகவை மீட்டு ஜெயலலிதா தொண்டர்களிடம் ஒப்படைக்க இருவரும் இணைந்து செயல்பட முடிவு. ஆணவத்துடன், அரக்கர்கள் போல செயல்படும் நபர்களிடமிருந்து அதிமுகவை மீட்கவுள்ளோம். ” என்றார்.